தமிழில் நடிகர் சந்தானம்  நடித்து இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். லார்க் ஸ்டுடியோஸ்  திரு.கே.குமார் அவர்கள் தயாரித்த பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கானா பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

நடிகர் சந்தானம்  உடன் இணைந்து அனைகா சோட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். நடிகர் மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மாறன் மற்றும் பல காமெடி நடிகர்கள் இணைந்து நடித்து வெளிவந்த இத்திரைப்படம் காமெடியில் கலக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் பயணத்தை தொடங்கிய சஷ்டிகா ராஜேந்திரன் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  நடிகையாக காலடி எடுத்து வைத்துள்ளார். 

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சஷ்டிகா ராஜேந்திரனை இன்ஸ்டாகிராமில்  90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள் . இந்நிலையில் தற்போது சஷ்டிகா ராஜேந்திரன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் இருக்கும் பல இன்ஸ்டாகிராம் பிரியர்களும் REELS வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் நடிகை சஷ்டிகா ராஜேந்திரன் தனது நீச்சல் குளத்தில் விளையாடும் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

சமீபத்தில் நடிகை கோவை சரளாவின் குரலில் இருக்கும் ஒரு நகைச்சுவை காட்சியில் வசனத்தை நடிகை சஷ்டிகா ராஜேந்திரன் REELS செய்து ட்ரண்ட் ஆன நிலையில் பிகினி உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் மீண்டும் பிரிண்ட் ஆகி உள்ளார். சஷ்டிகா ராஜேந்திரனின் பிகினி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.