கொரோனா வைரஸ் உலகத்தையே கடந்த 2019 இறுதி முதல் பெரிதும் அச்சுறுத்தி வருகிறது.பலரும் இந்த கொடிய நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.பல உயிர்கள் இந்த நோயால் பிரிந்தன.2020-ல் உலகில் பல தொழில்களை ஸ்தம்பிக்க செய்தது இந்த கொரோனா வைரஸ்.

2020 பாதியில் இந்த நோயின் தாக்கம் சற்று குறைந்தது மக்கள் மெல்ல மெல்ல தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர்.இந்த நேரத்தில் கொரோனாவிற்கு சில மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.ஆனால் இன்னும் எந்த அளவு மருந்து நோயை குணப்படுத்துகிறது என்று தெரியவில்லை.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மீண்டும் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது.பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.சில மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்திலும் ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

சாதாரண மக்களை தாண்டி பல பிரபலங்களும் முக்கிய பிரமுகர்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தற்போது பிரபல நடிகரும்,இயக்குனருமான சுந்தர் சி கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது மனைவி குஷ்பூ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அவர் விரைவில் குணமடைய பலரும் தங்கள் பிரார்த்தனையை தெரிவித்து வருகின்றனர்.