பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமாகவும் ஜொலிக்கும் அஜித் குமார் அவர்கள் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் AK61. நேர் கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் H.வினோத் AK61 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

3-வது முறையாக இணைந்துள்ள அஜித் குமார் - H.வினோத் - போனிகபூர் - நீரவ்ஷா வெற்றிக் கூட்டணியில் தயாராகிவரும் AK61 திரைப்படத்தில் மஞ்சுவாரியார் கதாநாயகியாக நடிக்கிறார். இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள AK61 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் அஜித்குமார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் AK62 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதனிடையே தொடர்ந்து தனது பைக் ரைடிங்கிலும் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார் சமீபத்தில் ஹெலிகாப்டரையும் இயக்கியுள்ளார். அஜித்குமார் ஹெலிகாப்டர் இயக்கிய புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் அஜித்குமாரின் பைக் ரைடிங் சுற்றுப் பயணத் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு பைக் ரைடிங் உலக சுற்றுப் பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்கிய அஜித்குமார் இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களில் பயணத்தை முடித்துவிட்டு 2023 ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் பயணத்தை தொடங்க உள்ளதாகவும் இந்தியாவில் அவர் மேற்கொள்ளும் இந்த சுற்றுப்பயணத்தின் திட்டம் குறித்த விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அந்த பதிவு இதோ…
 

#AjithKumar #ak #worldtour update #akmotorcyclediaries pic.twitter.com/wz1bEXSCLH

— Suprej Venkat (@suprej) September 15, 2022

Updated Map for the ❤️ of #ak’s fans#AjithKumar #akmotorcyclediaries #worldtour pic.twitter.com/ixaDz3R1FL

— Suprej Venkat (@suprej) September 15, 2022