வெந்து தணிந்தது காடுக்கு அடுத்து பிரபல ஹீரோவுடன் இணையும் GVM!
By Anand S | Galatta | September 15, 2022 15:14 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து தனக்கே உரித்தான ஸ்டைலில் அழகான திரைப்படங்களை வழங்கி வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வரும் திரைப்படங்களின் மீது ரசிகர்களுக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. குறிப்பாக கௌதம் வாசுதேவ் மேனன் படங்களின் காதல் காட்சிகளில் உள்ள மேஜிக் அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும்.
இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஃபகத் பாஸிலின் ட்ரான்ஸ், துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஜீவி பிரகாஷின் செல்ஃபி உள்ளிட்ட படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன் அடுத்ததாக, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி & விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் விடுதலை படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே 3-வது முறையாக இணைந்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன் - சிலம்பரசன்.TR - A.R.ரஹ்மான் கூட்டணியில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று செப்டம்பர் 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் கதையில் கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட புதிய பரிமாணத்தில் வெளிவந்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.முன்னரே வெந்து தணிந்தது காடு படத்திற்கு PART 2 இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் வெற்றியை கொண்டு PART 2 குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெறும் 55 நாட்களில் படமாக்கப்பட்டது, சிலம்பரசன்.TRன் நடிப்பின் உச்சத்தை இதில் பார்க்கலாம் என தெரிவித்துள்ள இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது அடுத்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியுடன் இணைய உள்ளதாகவும் ஸ்ரீ ஸ்ரவான்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
We shot #VendhuThanindhathuKaadu / #TheLifeOfMuthu in 55 days uncompromisingly. You'll see the peak performance of @SilambarasanTR_ in this film. My film with @ramsayz under @SravanthiMovies banner will be next year - Ace director @menongautham pic.twitter.com/KXGmglSo3g
— Rekha (@ProRekha) September 15, 2022
Gautham Menon announces to work with this actor after VTK - check it out!!
15/09/2022 03:35 PM
Thiruchitrambalam Megham Karukatha Video Song Dhanush Nithya Menon Anirudh
12/09/2022 09:45 PM