தமிழ் திரையுலகின் முன்னணி அதிரடி ஆக்ஷன் கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து ஆக்ஷன் ப்ளாக் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய், தமிழ் சினிமாவின் ஃபேவரட் கமர்சியல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்த யானை திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடரந்து மீண்டும் இயக்குனர் அறிவழகன் உடன் இணைந்த அருண் விஜய், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முதல் முறையாக தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸில் நடித்தார். SonyLIV தளத்தில் வெளிவந்த தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. முன்னதாக அருண் விஜய் நடித்துள்ள பார்டர் மற்றும் அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்களும் விரைவில் வெளியாக காத்திருக்கின்றன.

இந்த வரிசையில் அடுத்த கவனம் ஈர்க்கும் திரைப்படமாக அருண் விஜய் நடிப்பில் வெளிவருகிறது சினம் திரைப்படம். இயக்குனர் GNR.குமரவேலன் இயக்கத்தில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ள சினம் திரைப்படத்தில் பல்லாக் லால்வானி கதாநாயகியாக நடிக்க, காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக மூவிஸ் ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் R.விஜய்குமார் தயாரித்துள்ள சினம் திரைப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவில், A.ராஜாமுஹமது படத்தொகுப்பு செய்ய, ஷபீர் இசையமைத்துள்ளார். நாளை செப்டம்பர் 16-ம் தேதி சினம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், தற்போது சினம் திரைப்படத்திலிருந்து புது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

#SinamFromTomorrow!!💥#SinamFromSept16th pic.twitter.com/6KBhgHb425

— ArunVijay (@arunvijayno1) September 15, 2022