ட்ரெண்ட் அடிக்கும் வாரிசு படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் !
By Aravind Selvam | Galatta | September 15, 2022 13:48 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் வாரிசு.
தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.
தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் சரத்குமார்,பிரபு,பிரகாஷ்ராஜ்,ஜெயசுதா,தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,ஷாம்,சங்கீதா,யோகி பாபு,சம்யுக்தா ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி செம வைரலாகி வந்தன.விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த இந்த படப்பிடிப்பில் இருந்து குஷ்பூ,சரத்குமார்,பிரபு ஆகியோர் இணைந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.இந்த புகைப்படம் வெளியாகி செம வைரலாகி வருகிறது.
The #Varisu trio! 😍🎉@realsarathkumar @khushsundar #Prabhu #ThalapathyVijay #Vijay #Varisu #Thalapathy #RashmikaMandanna pic.twitter.com/9VJNaTAnqC
— Galatta Media (@galattadotcom) September 14, 2022