"தளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் இப்படி வந்திருக்க வேண்டியது" படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் பகிர்ந்த தகவல் - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

புலி திரைப்படம் குறித்து அட்டகாசமான தகவலை பகிர்ந்த படத்தொகுப்பாளர் வீடியோ உள்ளே - Editor Sreekar Prasad about Thalapathy Vijay Puli movie | Galatta

இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் 2. இந்த மாதம் வரும் ஏப்ரல் 28 ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு உலகளவில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வருகிறது. காரணம் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்களுக்கு இரண்டாம் பாகம் குறித்த தனி எதிர்பார்ப்பை உருவாக்கியது. இதையடுத்து வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிராசாத் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்தும் மற்றும் அவரது திரைப்பயணத்தில் வெளியான பிரம்மாண்ட படங்கள் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் படதொகுப்பாளராக பணியாற்றியது குறித்து அவர் பேசுகையில்,  

"அது ஒரு தமிழில் புதுமுயற்சியான திரைப்படம். அந்த படம் பிரபல ஹாலிவுட் படமான 'வில்லோவ்' போன்றது. அது போலதான் அந்த படமும் தொடங்கியது. சிம்புதேவன் முன்னதாகவே 23ம் புலிகேசி படம் பண்ணிருந்தார். அவர் ஏற்கனவே வரலாற்று சார்ந்த கதைகளத்தில் பணியாற்றியதில் அனுபவம் மிக்கவர். அந்த படம் அதுபோன்ற சிறந்த திரைப்படமாக வர நிறைய முயற்சி செய்தோம். இருந்தாலும் நாங்கள் நினைத்தபடி அதை வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்" என்றார்.

கடந்த 2015 ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான அட்வேண்டர்ஸ் பேண்டசி திரைப்படம் ‘புலி’ இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் விஜயுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வாணி, ஸ்ரீ தேவி, பிரபு, சுதீப், தம்பி ராமையா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார்.  ஆக்ஷன் அதிரடியில் மாஸ் காட்டும் தளபதி விஜய் இப்படத்தில் தனது பாணியில் இருந்து விலகி புது முயற்சியான திரைப்படத்தை கொடுத்திருப்பார். அதிக எதிர்பார்புடன் வெளியான திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. விஜய் ரசிகர்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரபல படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட நேர்காணல் இதோ..

ரசிகர்கள் கொண்டாடும் ‘PS Anthem’ பாடல் உருவான விதம்.. ஏ ஆர் ரகுமான் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு நேர்காணல் இதோ..
சினிமா

ரசிகர்கள் கொண்டாடும் ‘PS Anthem’ பாடல் உருவான விதம்.. ஏ ஆர் ரகுமான் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு நேர்காணல் இதோ..

முதல் முறையாக ஒரே Frame ல் பொன்னியின் செல்வன் உடன் பிறப்புகள்.. – வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

முதல் முறையாக ஒரே Frame ல் பொன்னியின் செல்வன் உடன் பிறப்புகள்.. – வைரலாகும் Glimpse இதோ..

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயனின் அயலான்.. – ஏலியன் entry உடன் வெளியானது மிரட்டலான Glimpse..
சினிமா

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயனின் அயலான்.. – ஏலியன் entry உடன் வெளியானது மிரட்டலான Glimpse..