“கண்ணாலனே பாடல் இப்படிதான் உருவானது..” மணிரத்னம் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – அட்டகாசமான நேர்காணல் இதோ..

கண்ணாலனே பாடல் உருவான விதம் குறித்து மணிரத்தினம் பகிந்த தகவல் உள்ளே -Maniratnam about kannalanae song making | Galatta

கடந்த 1995 ல் இந்திய சினிமாவே கவனித்து பார்த்த திரைப்படம் ‘பாம்பே’. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இப்படம் இந்து முஸ்லீம் பிரச்சனையை கதைக்களமாக கொண்டு உருவானது. படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை இந்தியா முழுவதும் பெற்றது. அரவிந்த் சாமி, மனிஷா கொய்ரலா நடித்த இப்படத்தினை ஆலயம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பார் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜீவ் மேனன். மேலும்  படம் வெளியாவதற்கு முன்னரே பல மொழிகளில் படம் குறித்து பேச வைத்தவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். அட்டகாசமான மெலடிகளை வரிசைக் கட்டி இறக்கி ஒவ்வொரு பாடலிலும் மிரட்டலான திறமையை காட்டிருப்பார். அந்த படம் குறித்த அனுபவங்களை நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் மணிரத்னம் இருவரும் இணைந்து பகிர்ந்திருப்பார்கள்.

படத்தில் பாடல்கள் இடம்பெறுவது குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

கண்ணாலனே' பாடல் அருமையான பாடல் அது. ஏ ஆர் ரகுமான் பாம்பே படத்தில் உயிரே பாடலுக்கான காட்சிக்காக அந்த கண்ணாலனே பாடலை உருவாக்கினார்.  நான் கண்ணாலனே பாடலை அவர் ஸ்டுடியோ முதல் வீடுவரை கேட்டு கொண்டே இருந்தேன். நான் அந்த பாடலில் மூழ்கி போனேன். பின் நான் அவரிடம் கேட்டேன் . நாம் இதை வேறு ஒரு காட்சிக்கு பயன்படுத்தலாமா? உயிரே தருணத்திற்கு வேறு பாடலை உருவாக்கலாம் என்று.. எனக்கு தெரியும் இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்.  நான் அந்த பாடலை வேறு மாதிரி காட்ட நினைத்தேன்.அவர் அதற்கு 2,3 நொடிகளில் சரி செய்வோம் என்றார்.  அவர்  அந்த கண்ணாலனே பாடலை மிக நேர்த்தியாக உருவாக்கினார்." என்றார் இயக்குனர் மணிரத்னம்.

பின் ஏஆர் ரகுமான், "அது நிச்சயமாக புத்திசாலித்தனம். அந்த தருணத்திற்து அது போன்ற பாடல் தேவைப்படுகிறது. அது ஒரு கல்யாண பாடலாக காட்சி இருக்கும். கொண்டாட்டத்திற்காக இருக்கும் ஆனால் அது ஒரு மெலடி பாடல்.  அதை உருவாக்கியது நிச்சயமா புத்திசாலிதனம் என்றே சொல்வேன். அந்த பாடலில் இடம் பெற்றுள்ள ‘குமுசுகு’ சந்தம் வைரமுத்து எழுதியிருந்தார் அந்த பாடல் முதல் முறையில் இந்தியில் உருவாக்கினோம் பின் தமிழில் மாற்றினோம்” என்றார் ஏ ஆர் ரகுமான்.

அதை தொடர்ந்து மணிரத்னம், “ அந்த பாடல் உருவாகும் போது அவர் அறைக்கு சென்ற போது சில கோரஸ் பாடகர்களை கொண்டிருந்தார். மிக அருமையாக அந்த பிரிவை உருவாக்கினார்.” என்றார் மணிரத்தினம் . பின் ஏ ஆர் ரகுமான் யார் முன்னிலையில் அது நடக்கின்றது என்பது முக்கியம் நாம் சில பேரை கவர சில விஷயங்கள் செய்தாக வேண்டும் என்று சிரித்தார் ஏ ஆர் ரகுமான்.

மேலும் ஏ ஆர் ரகுமான் மற்றும் மணிரத்தினம் இருவரும் தங்கள் 31 ஆண்டு கால கூட்டணி குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்ட தருணம் இதோ..

முதல் முறையாக ஒரே Frame ல் பொன்னியின் செல்வன் உடன் பிறப்புகள்.. – வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

முதல் முறையாக ஒரே Frame ல் பொன்னியின் செல்வன் உடன் பிறப்புகள்.. – வைரலாகும் Glimpse இதோ..

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயனின் அயலான்.. – ஏலியன் entry உடன் வெளியானது மிரட்டலான Glimpse..
சினிமா

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயனின் அயலான்.. – ஏலியன் entry உடன் வெளியானது மிரட்டலான Glimpse..

PS 2 படத்தின் 'சின்னஞ்சிறு நிலவே' பாடலின் வீடியோ வெளியானது - அட்டகாசமான Glimpse  இதோ..
சினிமா

PS 2 படத்தின் 'சின்னஞ்சிறு நிலவே' பாடலின் வீடியோ வெளியானது - அட்டகாசமான Glimpse இதோ..