விக்ரம் படத்தை தொடர்ந்து ஆக்ஷனில் மிரட்டவிருக்கும் லியோ.. - ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் அப்டேட்.. விவரம் உள்ளே..

மிரட்டலான சண்டை காட்சிகளுடன் உருவாகும் லியோ அட்டகாசமான அப்டேட் இதோ – Leo movie uses mocobot camera | Galatta

தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஆக்ஷன் திரைப்படங்களின் தரம் ஒருபடி மேல் சென்று ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கு கொண்டு வர ஸ்டன்ட் காட்சிகளில் படக்குழு மெனக்கெட்டு வருகின்றனர். அதற்கேற்ப சண்டை வடிவமைப்பு மட்டுமல்லாமல் தொழில்நுட்ப கருவிகள், சிறப்பு சப்தம் பின்னணி இசை என்று தனி தனியாக அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு சண்டை காட்சிக்கும் ஒரு தனி திரைக்கதையை சம கால இயக்குனர்கள் வடிவமைத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த திரைப்படம் ‘விக்ரம்’ கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவான இப்படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் தரமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காட்சியின் தரத்தை ரசிகர்களுக்கு புரிய வைத்து கண்களுக்கு விருந்தளித்திருப்பார்கள். அப்படத்தின் முக்கிய காட்சிகளாக இடைவெளி சண்டை காட்சி இடம் பெற்றிருக்கும். அதில் சிறந்த கட்சிகளை காட்டுவதற்காக அதிநவீன ரோபோ கேமராவை பயன்படுத்தி அந்த காட்சியை வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டு சேர்த்திருப்பார்கள்.

அந்த படம் மூலம் மொக்கோ பாட் என்றழைக்கப்படும் அந்த அதிநவீன கேமரா தற்போது பல படங்களில் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. தளபதி விஜய் நடிக்கும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படத்திற்கு கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. வரும் ஆயுத பூஜை தினத்தையொட்டி லியோ திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதி நவீன தானியங்கி கேமரா நிறுவனம் மொக்கோ பாட் ஸ்டுடியோவிடம் ரசிகர்கள் நீங்கள் சமீபத்தில் ஒப்பந்தமாகியுள்ள திரைப்படம் என்னவென்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள், லியோ படத்தின் போஸ்டரை பதிவிட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து லியோ படத்தில் மொக்கோ பாட் கேமரா பயன்படுத்தியுள்ளீர்களா?என்ற கேள்விக்கு சண்டை பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவு அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஆம் என்று உறுதிபடுத்தியுள்ளனர்.

ar rahman about ps anthem making process ponniyin selvan part 2

விக்ரம் திரைப்படத்திலும் சண்டை வடிவமைப்பு இரட்டையர்களான அன்பறிவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருவரது சண்டை வடிவமைப்பு ரசிகர்களை இதுவரை ஏமாற்றம் அடைய செய்தததில்லை. லியோ படத்தில் அட்டகாசமான ஸ்டன்ட் காட்சிகள் இடம் பெறுவது ஏற்கனவே தெரிந்தது. தற்போது அந்த காட்சிகளின் தரத்தை கூட்டுவதற்கு மொக்கோ பாட் பயன்படுத்தியிருப்பது தற்போது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இந்த அப்டேட்டினை விஜய் ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்னதாக தளபதி நடிப்பில் வெளியானப் பீஸ்ட் திரைப்படத்திலும் இந்த மொக்கோ பாட் பயன்படுதிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயனின் அயலான்.. – ஏலியன் entry உடன் வெளியானது மிரட்டலான Glimpse..
சினிமா

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயனின் அயலான்.. – ஏலியன் entry உடன் வெளியானது மிரட்டலான Glimpse..

PS 2 படத்தின் 'சின்னஞ்சிறு நிலவே' பாடலின் வீடியோ வெளியானது - அட்டகாசமான Glimpse  இதோ..
சினிமா

PS 2 படத்தின் 'சின்னஞ்சிறு நிலவே' பாடலின் வீடியோ வெளியானது - அட்டகாசமான Glimpse இதோ..

பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்.. அட்டகாசமான அப்டேட்டை கொடுத்த விக்னேஷ் சிவன் – முழு நேர்காணல் உள்ளே..
சினிமா

பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்.. அட்டகாசமான அப்டேட்டை கொடுத்த விக்னேஷ் சிவன் – முழு நேர்காணல் உள்ளே..