ரசிகர்கள் கொண்டாடும் ‘PS Anthem’ பாடல் உருவான விதம்.. ஏ ஆர் ரகுமான் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – முழு நேர்காணல் இதோ..

PS anthem குறித்து இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பகிர்ந்த தகவல் முழு வீடியோ இதோ - Ar Rahman about PS anthem | Galatta

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக இமாலய சாதனையை படைத்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவான இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். லைகா தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28 ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதற்கான முன்பதிவு மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் ஏற்பாடு செய்த சிறப்பு பேட்டியில் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் ஏ ஆர் ரகுமான் அவர்கள் கலந்து கொண்டு பொன்னியின் செல்வன் படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பர பாடலாக வெளியான ‘PS Anthem’ என்ற பாடல் உருவான விதம் குறித்துஏ ஆர் ரகுமான் பகிர்ந்து கொண்டவை, “படத்திற்கு ஒரு விளம்பர பாடல் தேவை என்று மணிரத்னம் என்னிடம் கூறினார். நான் பல வழிகளில் அதுகுறித்து யோசித்தேன், அதனால் பாடலின் சாரத்தை ஹிந்தி பாடல் சாரத்தில்  உருவாக்க வேண்டும் என்று எண்ணினேன். பின் ஹிந்தி சாரத்தில் பாடலை இசையமைத்தால் அதன்மூலம் தமிழில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவரும் என்று யோசித்தேன். அர்ஜித் சிங் பாடினால் அந்த பாடல் எப்படி இருக்கும் என்று எண்ணினேன். அது ஹிந்தியிலும் நன்றாக வரவேற்பு கிடைக்கும் என்று ஒரு மெலடியை உருவாக்கினேன். மணிரத்தினம் அவருக்கு அந்த டியூன் பிடித்தது. பின் நாங்கள் அதில் வேலை பார்த்தோம்.

அந்த நேரம் நான் meta project ல் வேலை செய்து வந்தேன். அதற்காக தனி டியூன் தயார் செய்து வைத்திருந்தேன். அது ஜாக்சன் இசையை போன்ற ஒரு விஷயம். பின் இந்த இரண்டு டியூனையும் கலந்தால் என்னவென்று யோசித்து செய்தேன். அவர் சிறந்த யோசனை என்றார். பின் பாடலின் வரிகளை எங்களால் ஒரு போதும் உடைக்க முடியாது. பின் அதற்கான தனி வெல்கையில் இறங்கினோம். பாடல் வெளியாவதற்கு மூன்று நாட்கள் முன்பு மீண்டும் அந்த பாடலில் வேலையை தொடங்கினேன். அதில் வரிகளை உடைத்தோம். மணிரத்னம் அவருக்கு இந்த யோசனை பிடித்தது. பின் மீண்டும் அதே மீட்டரில் டியூனை கொண்டு வந்தோம். “ என்றார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.

பின் மணிரத்தினம் அவர்கள் மணிரத்னம், “நாங்கள் சரியான பாடலை தேடினோம். ஒரு நவீன தன்மை கலந்த பாடலாக ஒன்று தேவைப்பட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் பார்க்கப்போனால் நிறைய பாடல்கள் உள்ளது. ஆனால் பெரும்பாலான பாடல்களுக்கு தனி திரைக்கதையோ நடிகர்கள் நடிக்கவோ தேவையில்லை. அது படத்தோடு ஒன்றியே நகரும். அதனால் இதை தாண்டி ஒரு பாடல் கவனத்தை ஈர்க்க தேவைப்பட்டது. அது தான் நாங்கள் தேடியது. அது கிடைத்தும் விட்டது” என்றார்.

PS Anthem பாடல் படமாக்கம் குறித்து,  “அந்த பாடல் பிருந்தா மாஸ்டர் தான் இயக்குனார். அவர் ஒரு வாளை என்னிடம் கொடுத்தார். நான் சொன்னேன் இது எதற்கு என்று.. அவர் சும்மா எதாவது பண்ணுங்க சார் என்றார். நான் முன்னதே இது குறித்து சொல்லியிருக்க வேண்டும் என்றேன். பின் அந்த வாளை சுழற்றி எதாவது செய்தேன். அந்த தருணம் வேடிக்கையாக இருந்தது.” என்றார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு தனி சிறப்பு பாடலாக உருவானது இந்த PS anthem பாடல், இப்பாடல்  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் கடந்த ஏப்ரல் 15 ம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தற்போது 2 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை சிவா ஆனந்த் எழுதியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து பாடலை பாடியுள்ளார்.

மேலும் பொன்னியின் செல்வன் படம் குறித்தும் 31 ஆண்டு கால கூட்டணி குறித்தும் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் ஏ ஆர் ரகுமான் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட வீடியோ இதோ..

 

PS 2 படத்தின் 'சின்னஞ்சிறு நிலவே' பாடலின் வீடியோ வெளியானது - அட்டகாசமான Glimpse  இதோ..
சினிமா

PS 2 படத்தின் 'சின்னஞ்சிறு நிலவே' பாடலின் வீடியோ வெளியானது - அட்டகாசமான Glimpse இதோ..

பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்.. அட்டகாசமான அப்டேட்டை கொடுத்த விக்னேஷ் சிவன் – முழு நேர்காணல் உள்ளே..
சினிமா

பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் புதிய படம்.. அட்டகாசமான அப்டேட்டை கொடுத்த விக்னேஷ் சிவன் – முழு நேர்காணல் உள்ளே..

பாடல்கள் இல்லாத படம்? மணிரத்தினம் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..
சினிமா

பாடல்கள் இல்லாத படம்? மணிரத்தினம் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..