தாயார் ஷோபா சந்திரசேகர் உடன் தளபதி விஜய்... சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் அசத்தலான புதிய புகைப்படம் இதோ!

தாயார் ஷோபா சந்திரசேகர் உடன் தளபதி விஜய் இருக்கும் புகைப்படம்,Thalapathy vijay new pic with his mother shoba chandrasekar | Galatta

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் தென் இந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தியாகவும் திகழும் தளபதி விஜய் தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்டுள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நுழைந்த தளபதி விஜய் மிக குறுகிய காலகட்டத்திலேயே எக்கச்சக்கமான ஃபாலோவர்களை கொண்ட நட்சத்திரம் என பல சாதனைகள் படைத்தது இதனை உறுதிப்படுத்தியது. முன்னதாக இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தையே வெற்றியோடு தொடங்கிய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டைனராக பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. 

இதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தளபதி 67 படமான லியோ திரைப்படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். பீஸ்ட் திரைப்படத்தின் சமயத்தில் இருந்தே தளபதி 67 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க ஆரம்பித்தன. மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி மற்றும் விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றி ஆகியவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 67-வது திரைப்படமான லியோ திரைப்படத்திற்கு இந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தின. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகும் இந்த லியோ திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோரோடு பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு மேல் நடைபெற்ற லியோ திரைப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெறுகிறது. வருகிற ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்த நாளன்று லியோ திரைப்படத்தின் அட்டகாசமான அறிவிப்பு வரும் என தயாரிப்பாளர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தளபதி விஜயின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. தனது தாயார் ஷோபா சந்திரசேகர் உடன் தளபதி விஜய் இருக்கும் புகைப்படம் தான் அது. ஒரு SOFA-ல் ஷோபா சந்திரசேகர் அவர்கள் அமர்ந்திருக்க, தரையில் அவர் அருகில் தளபதி விஜய் அமர்ந்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாக்களில் ஃட்ரண்டாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…
 

Latest picture of #ThalapathyVijay with his mother❤️@actorvijay #Leo #LeoFilm #Vijay #Galatta pic.twitter.com/eeoc0SeJ6l

— Galatta Media (@galattadotcom) April 25, 2023

பொன்னியின் செல்வன் 2 பட புது சர்ப்ரைஸ்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அக நக பாடலின் ரொமான்டிக்கான வீடியோ இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 பட புது சர்ப்ரைஸ்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அக நக பாடலின் ரொமான்டிக்கான வீடியோ இதோ!

அஜித் குமார் - ஷாலினியின் அட்டகாசமான காதல் பயணத்தின் 23வது திருமண நாள் கொண்டாட்டம்! ஃட்ரண்டாகும் புது புகைப்படம் இதோ
சினிமா

அஜித் குமார் - ஷாலினியின் அட்டகாசமான காதல் பயணத்தின் 23வது திருமண நாள் கொண்டாட்டம்! ஃட்ரண்டாகும் புது புகைப்படம் இதோ

தளபதி விஜயின் துப்பாக்கி பட 12 MAN SHOOTOUT SCENE இவ்வளவு நீளமா?- ஸ்ரீகர் பிரசாத் பகிர்ந்த சுவாரசிய தகவல் இதோ!
சினிமா

தளபதி விஜயின் துப்பாக்கி பட 12 MAN SHOOTOUT SCENE இவ்வளவு நீளமா?- ஸ்ரீகர் பிரசாத் பகிர்ந்த சுவாரசிய தகவல் இதோ!