தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தனக்கே உரித்தான பாணியில் பல வித்தியாசமான திரைப்படங்களை கொடுப்பதில் வல்லவர்.  இயக்கத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் பல கதாபாத்திரங்களில் வெரைட்டி கொடுப்பவர். 

முன்னதாக இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் சாதனை முயற்சியாக ஒரே ஒரு நபர்  மட்டும் நடிக்கும் ஒத்த செருப்பு திரைப்படத்தில் நடித்து இயக்கி மொத்த சினிமா உலகத்தையும் மிரள வைத்தார் பார்த்திபன். கற்பனைக்கு எட்டாத இந்த சாதனையை முயற்சிக்கு பலனாக பல விருதுகளும் வந்து குவிந்தன.

இயக்குனர் பார்த்திபனின் தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் ஒளிப்பதிவில் தயாரான ஒத்த செருப்பு திரைப்படம் விமர்சன ரீதியில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. ஒத்த செருப்பு ஹிந்தி ரீமேக் படத்தையும் இயக்குனர் பார்த்திபனின் இயக்குகிறார். 

ஒத்த செருப்பு ஹிந்தி ரீமேக்-ல் கதாநாயகனாக அபிஷேக்பச்சன் நடிக்கிறார் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதன் படப்பிடிப்பு புகைப்படத்தை இயக்குனர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து நடிகர் அபிஷேக் பச்சனை புகழ்ந்து, பதிவிட்டுள்ளார் அந்த பதிவில், பெருமையின்றி அலர்ட்டா இருப்பதும், அலட்டாமல் இருப்பதும் அடுத்த லெவலில் தன் நடிப்பு இருக்க மெனக்கெடுவதும் ரசிக்கிறேன் >mr.ABISHEK BACHAN!!! பாதிப்படம் கடந்துவிட்டேன்.எனக்கே முதல் ஹிந்தி>என்னுடன் ராம்ஜி (cinematography)சத்யா(music) சுதர்சன்(editor) என்று தமிழ் அள்ளிப் போகிறேன்! என பதிவிட்டுள்ளார்.