தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்.இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு, நல்ல TRPயையும் பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரில் பங்கேற்ற பிரபலங்கள் பட்டி தொட்டி எங்கும் உள்ள மக்களின் ஆதரவை பெற்று நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்.இதன் முதல் சீசன் தொடங்கப்பட்டபோது பலரும் ஆர்வத்தோடு இந்த தொடரை பார்க்க ஆரம்பித்தனர்.ஓவியா,ஆரவ்,கஞ்சா கருப்பு,பரணி,பொன்னம்பலம்,வையாபுரி,காயத்ரி ரகுராம்,ஹரிஷ் கல்யாண்,பிந்து மாதவி,ரைசா,சினேகன் என்று பலரும் இந்த தொடரில் பங்கேற்ற அனைவரும் இந்த தொடரை மிகவும் பிரபலமாக்கினர்.ஆரவின் மருத்துவ முத்தம்,ஓவியாவின் தைரியமான பேச்சு மற்றும் தற்கொலை முயற்சி,எல்லாத்துக்கும் பரணி தான் காரணாம் என்ற கஞ்சா கருப்பின் டயலாக்,பிக்பாஸ் வீட்டில் இருந்து எஸ்கேப் ஆக முயற்சி செய்த பரணி,சினேஹானின் கட்டிப்புடி வைத்தியம்,ஓவியா ஆர்மி என்று பல சுவாரசிய நிகழ்வுகளோடு தொடங்கியது இந்த நிகழ்ச்சி.இவற்றோடு கமலின் வார்த்தை விளையாட்டுகளும் சேர்ந்துகொள்ள மக்கள் மனதில் ஒரு முக்கிய இடத்தை பிடித்து சிம்மாசனம் போட்டு சிறந்த நிகழ்ச்சியாக அமர்ந்தது பிக்பாஸ்.

முதல் சீசனின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து,அடுத்த வருடம் சீசன் 2 தொடங்கியது ,சீசன் 1-லிலேயே இவ்வளவு பரபரப்பு இருக்க சீசன் 2 மட்டும் குறைச்சலாக இருக்குமா என்ன என்று ரசிகர் யார் யார் பங்கெடுக்கிறார்கள் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தனர்.யாஷிகா ஆனந்த்,மஹத்,ஜனனி ஐயர்,ரித்விகா,தாடி பாலாஜி,சென்றாயன்,மும்தாஜ்,ஐஸ்வர்யா தத்தா என்று களைகட்டியது பிக்பாஸ் 2.மஹத்-யாஷிகாவின் காதல்,பாலாஜியின் குடும்ப விவகாரம் என்று மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது இரண்டாவது சீசன்.

அதுதான் எல்லாமே பண்ணிட்டீங்களே என்று ரசிகர்கள் பெருமூச்சு விடுவதற்குள் ,அடுத்த சீசன் தொடங்கியது.இந்த சீசன் தொடக்கத்தில் ஷெரின்,சாண்டி,கவின்,லாஸ்லியா,தர்ஷன்,சேரன்,சரவணன்,மதுமிதா,வனிதா என்று கலகலப்பாகவே தொடங்கியது ஆனால் போக போக கவின்-லாஸ்லியா காதல் விவகாரம்,சேரன்-சரவணன் வாக்குவாதம்,மதுமிதாவின் தற்கொலை முயற்சி,வனிதாவின் கொளுத்திப்போடும் குணம் என்று தொடர் பரபரப்பாக சென்று அதிக TRP-யை அள்ளியது.

இந்த மூன்று சீசனில் பங்கேற்ற பிரபலங்களும் , பல லட்சம் ரசிகர்களை பெற்று நட்சத்திர அந்தஸ்துக்கு வெகு விரைவில் உயர்ந்தனர்.ஆனால் அவற்றை தக்கவைத்துக்கொண்டு வெற்றிகரமாக இருப்பது சிலர் மட்டுமே,ஹரிஷ் கல்யாண்,ரைசா,மஹத் போன்றோர் பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியேறிய பின் படங்களில் நடிப்பதில் பிஸி ஆகி தங்களின் ரசிகர்களை தக்கவைத்து வருகின்றனர்.தற்போதைய சீசன் மூலம் பிரபலமான கவின்,லாஸ்லியா,வனிதா ஆகியோர் தங்களது நட்சத்திர அந்தஸ்தை சரியாக பயன்படுத்தி வருகின்றனர்.

பிக்பாஸ் தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை அள்ளிக்குவித்தவர் என்றால் அது ஓவியா தான்,ஓவியா ஆர்மி என்று தொடங்கி ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்தனர்.அவர் எங்கு சென்றாலும் அவரை காண ரசிகர்கள் பெருங்கூட்டமாய் கூடி வந்தனர்.ஆனால் ஓவியா பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியேறிய பிறகு சில படங்களில் மட்டுமே நடித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே தனது ட்விட்டர் பக்கத்தில்  சில நாட்களுக்கு முன் ஒரு பதிவிட்டுள்ளார் ஓவியா.அதில் பிக்பாஸ் தொடரை தடை செய்யவேண்டும் என்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லை எதிர்கிறீர்களா என்று ரசிகர்களிடம் கேள்வி எழுப்பினார் ஓவியா.இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது.இந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளேயே  ஒரு ரசிகரின் பதிவுக்கு பதிலளித்த ஓவியா, போட்டியாளர்களை TRP-க்காக தற்கொலை செய்ய தூண்டக்கூடாது என்று பதிலளித்தார்.மேலும் ஒரு ரசிகர் மதுமிதா தனது விளம்பரத்துக்காக கையை அறுத்துக்கொண்டார் என்று பதிவிட்டார் இதற்கு பதிலளித்த ஓவியா யாரும் விளம்பரத்திற்காக இப்படி பட்ட காரியத்தை செய்யமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.மற்றுமொரு ரசிகர் இந்த ஷோ இல்லையென்றால் உனக்கு ரீச்சே இல்லை பதிவிட்டார், இதனை கவனித்த ஓவியா புகழை விட உயிர் மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.இந்த சர்ச்சையே ஓயாத நிலையில் ஓவியா மீண்டும் சில டிவீட்களை பதிவிட்டுள்ளார்.

 இது குறித்து முன்னரே பேசாதது ஏன் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார் அதற்கு பதிலளித்த ஓவியா என்னை அப்போதே மனவளர்ச்சி குன்றியவர் என்று முத்திரை குத்தினார்கள் , இதனை தற்போது வெளியே சொல்வதும் என்னுடைய திருப்திக்காக மட்டுமே என்று தெரிவித்துள்ள அவர்.சுஷாந்திற்கு நடந்தது தமிழகத்தில் யாருக்கும் நடந்து விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

oviya makes shocking allegations against bigg boss

oviya makes shocking allegations against bigg boss