வரலக்ஷ்மி காவல் அதிகாரியாக நடித்திருக்கும் திரைப்படம் டேனி. இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பேசும் படமாக தெரிகிறது. இந்த படத்தை சந்தான மூர்த்தி இயக்கியுள்ளார். பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடிக்கின்றனர். 

தற்போது இந்த படத்திலிருந்து ஹே டேனி பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. சாய் பாஸ்கர் இசையில் உருவான இந்த பாடல் வரிகளை சதிஷ் குமார் எழுதியுள்ளார். உதய் கண்ணனுடன் இணைந்து இசையமைப்பாளரே இந்த பாடலை பாடியுள்ளார். இஜாஸ் அஹ்மத் இந்த பாடலை மாஸ்டரிங் செய்துள்ளார். இப்போதிருக்கும் சினிமா ட்ரெண்டில் வாயில்லா ஜீவனுக்கு தீம் சாங் போடுவது வழக்கமாக ஆகிவிட்டது. 

க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் வரலட்சுமி ஸ்டண்ட் காட்சிகளில் தானே ஈடுபட்டு நடித்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். கடைசியாக யார் பார்த்தது பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. டேனி திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி நேரடியாக Zee5 தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து கலர்ஸ் எனும் படத்தில் நடிக்கவுள்ளார். 

தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் வரலக்ஷ்மி. தற்போது இருக்கும் சினிமா ட்ரெண்டில், போல்டான கதாபாத்திரங்களை தேடி பிடித்து நடிக்கிறார். இறுதியாக வெல்வெட் நகரம் எனும் படத்தில் நடித்திருந்தார். லாக்டவுன் காரணமாக கிடைத்துள்ள இந்த நேரத்தை வரலட்சுமி தனது வீட்டிலேயே செலவழித்து வருகிறார். 

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் பல சமூகப் பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் லைஃப் ஆஃப் பை எனும் பேக்கரி கம்பெனியை துவங்கி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியூர் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி உதவி செய்தார் வரலக்ஷ்மி. 

சமூக வலைதளங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுவது மட்டுமின்றி அதிக தேவை இருக்கும் மக்களுக்கும் அவர் உதவி வருகிறார். சேவ் சக்தி (Save Shakti) பவுண்டேஷன் சார்பாக பசியால் வாடும் நாய், மாடு உள்ளிட்ட வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்தும், மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்.