ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.

கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.தற்போது புதிய எபிசோடுகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தனது ஜீ தமிழ் தோழிகளுடன் இணைந்து ஷபானா போட்டோஷூட்கள்,லைவ் என்று வந்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.மேலும் டிக்டாக்கிலும் மிகவும் ஆக்ட்டிவ் ஆக இருந்து வந்தார் ஷபானா.மேலும் சில நாட்களுக்கு முன் ரசிகர்களுடன் இணைந்து தமிழ் கற்றுக்கொண்டும் வந்தார் ஷபானா.

புதிய எபிசோடுகள் கடந்த ஜூலை 27ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.4 மாதங்களுக்கு பிறகு இந்த ஷூட்டிங்கில் இணைந்த ஜனனி அசோக்குமார்.இந்த தொடரின் ஷூட்டிங்கில் ஷபானா செய்யும் சேட்டைகளை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.தாராள பிரபு பாடலுக்கு அசத்தலாக பாடிக்கொண்டும்,ஆடிக்கொண்டும் ஷபானா மேக்கப் போடும் இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்