மலையாள திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் நிவின் பாலி நேரம் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் திரை உலகிலும் பிரபலமடைந்தார். இதனை அடுத்து இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் உடன் மீண்டும் இணைந்த நிவின்பாலி நடிப்பில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் பிரபல நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.

கடைசியாக நிவின்பாலி நடிப்பில் வெளியான மகாவீரயர் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. முன்னதாக நிவின்பாலியின் துறைமுகம் திரைப்படம் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக காத்திருக்கும் நிலையில் தமிழில் இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் மலையாளத்தில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின்பாலி நடித்திருக்கும் சாட்டர்டே நைட் திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இயக்குனர் லிஜு கிருஷ்ணா இயக்கத்தில் நிவின்பாலி நடித்திருக்கும் திரைப்படம் படவெட்டு. 

YOODLE FILMS மற்றும் சன்னி வெய்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படவெடு படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து அதிதி பாலன், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபக்.D.மேனன் ஒளிப்பதிவில் படவெட்டு படத்திற்கு ஷஃபீக் முஹம்மது அலி படத்தொகுப்பு செய்துள்ளார்.

கோவிந்த் வசந்தா படவெட்டு படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் 21ஆம் தேதி படவெட்டு படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படவெட்டு திரைப்படத்தில் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. அசத்தலான அந்த ட்ரைலர் இதோ…