தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா,ரசிகர்களால் செல்லமாக லேடி சூப்பர்ஸ்டார் என்று நயன்தாரா அழைக்கப்படுவார்.கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா.பெரிய ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

இவரது படங்கள் முன்னணி ஹீரோ படங்களுக்கு நிகராக வசூலிலும் சாதனை படைக்கும்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து அசத்தி விட்டார் நயன்தாரா.அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து அசத்தி உள்ளார் நயன்தாரா.

 இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வந்தனர்.இவர்களது திருமணம் கோலாகலமாக கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.செம கியூட்டான இந்த ஜோடிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருமணத்துக்கு பிறகு வெளிநாட்டு பயணம் என இந்த ஜோடி பிஸியாக இருந்து வருகின்றனர்.இவர்களது திருமணம் Neflix தளத்தில் வெளியாகவுள்ளது என்றும் இதனை இயக்குனர் கெளதம் மேனன் இயக்கியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தன.தற்போது இதனை உறுதிசெய்யும் விதமாக விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என Netflix தெரிவித்துள்ளனர்.