தமிழ்  தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் அஞ்சனா.சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.இதனை தொடர்ந்து புதுயுகம் மற்றும் ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்தார்.

டிவிகளில் மட்டுமல்லாமல் பல இசை வெளியீட்டு விழா மற்றும் பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.தனது பேச்சுதிறமையால் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் அஞ்சனா.ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் தொடரை தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா.இதனை தொடர்ந்து தீபக்குடன் இணைந்து இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா.

கொரோனவை அடுத்து டிவியில் சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வந்தார் அஞ்சனா என்றாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் குறையாமலேயே இருந்தது.தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கவில்லை என்றாலும் பிரஸ்மீட்,இசை வெளியீட்டு விழா என கடந்த சில மாதங்களாக செம பிஸியாக இருந்து வந்தார் அஞ்சனா.

சமூகவலைத்தளங்களில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் அஞ்சனா புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.தற்போது இவரது வீட்டில் ஒரு சோக சம்பவம் நடைபெற்றுள்ளது என்ற தகவலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் அஞ்சனா.இவரது மாமனார் சில தினங்களுக்கு முன் காலமானார் என்ற சோக செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

தனக்கு மற்றுமொரு தந்தை போல தோள்கொடுத்த தனது மாமனார் தற்போது இல்லை , அவருடன் பல சண்டைகள் முரண்பாடுகள் இருந்தாலும் அவர் என் மீதும் நான் அவர் மீதும் அதீத அன்பு கொண்டிருந்தேன்.அவரது இழப்பு ஈடுசெய்யமுடியாத ஒன்று எப்போதும் அவரது நினைவுகள் நீங்காமல் இருக்கும் என்று உருக்கமாக ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.பல ரசிகர்களும் பிரபலங்களும் அஞ்சனாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

 

vj anjana rangan mourns the death of her father in law emotional statement