தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக பல மாநிலங்களை கலக்கி வருகிறார்.தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோயினாக அறிமுகமானார் ஹன்சிகா.

தொடர்ந்து தமிழ்,தெலுங்கு என பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.இவர் நடித்த படங்களும் ரசிகர்கள் மத்தியல் ஹிட் அடிக்க இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து அசத்தினார் ஹன்சிகா.

அடுத்ததாக சில கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.இவரது 50ஆவது படமான மஹா ஜூலை 22ஆம் தேதி நாளை வெளியாகவுள்ளது.ETCETERA நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.யூ ஆர் ஜமீல் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் சிலம்பரசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான கெடுத்துட்டியே பாடல் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்