லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக O2 திரைப்படம் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் விரைவில் ரிலீஸாகவுள்ளது. மேலும் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள கோல்ட் திரைப்படமும் ரிலீஸாக தயாராகி வருகிறது.

முன்னதாக தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடியான நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் வருகிற ஜூன் 9ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. மகாபலிபுரத்தில் வருகிற வியாழக்கிழமை (ஜூன் 9) நடைபெறவிருக்கும் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், தளபதி விஜய், அஜித் குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவரும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர் மேலும் தமிழகத்தின் முதலமைச்சர் உயர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களையும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் கோலாகலமான இந்த திருமண நிகழ்ச்சியை  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க, நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தின் டிஜிட்டல் திருமண அழைப்பு வீடியோ தற்போது வெளியானது. அசத்தலான திருமண அழைப்பு வீடியோ இதோ…