முன்னணி நட்சத்திர நாயகியாக திகழும் நடிகை நயன்தாரா அடுத்ததாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தொடர்ந்து இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகும் கனெக்ட் படத்தில் நடிக்கிறார்.

மேலும் லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் திரைப்படத்திலும் நயன்தாரா நடிக்க உள்ளார். இதனிடையே இயக்குனர் G.S.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள O2 திரைப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் நேற்று ஜூலை 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் மணிரத்தினம், ஷாரூக்கான் உள்பட முன்னணி திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருப்பதி ஏழுமலையானை இன்று ஜூன் 10-ம் தேதி தரிசித்தனர். முன்னதாக திருமணம் திருப்பதியில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் மகாபலிபுரத்தில் நடைபெற்றதையடுத்து தற்போது இருவரும் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர். சற்றுமுன் இருவரும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…