தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் கலையரசன் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி, தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த கலையரசன் மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசியாக கலையரசன் நடிப்பில் வெளிவந்த குதிரைவால் திரைப்படமும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது.

இந்த வரிசையில் அடுத்ததாக கலையரசன் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் டைட்டானிக். இயக்குனர் M.ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டைட்டானிக் திரைப்படத்தை தயாரிப்பாளர் C.V.குமார் தயாரித்துள்ளார். கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்க, காளி வெங்கட், ஆஷ்னா சாவேரி, மதுமிதா, சேத்தன் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பல்லு ஒளிப்பதிவில், ராதாகிருஷ்ணன் தனபால் படத்தொகுப்பு செய்துள்ள டைட்டானிக் படத்திற்கு நிவாஸ்.K.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்நிலையில் டைட்டானிக் திரைப்படத்தில் இருந்து கொக்கா கொக்கா  வீடியோ பாடல் தற்போது வெளியானது. நடிகர் சிலம்பரசன்TR பாடியுள்ள கலக்கலான கொக்கா மக்கா பாடல் இதோ…