தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஆர்யா தற்போது வெப் சீரிஸிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். த்ரில்லர் வெப் தீரிஸாக தயாராகியுள்ள தி வில்லேஜ் வெப் சீரிஸில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். தி வில்லேஜ் வெப் சீரிஸ் விரைவில் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது.

இதனையடுத்து இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வரும் நடிகர் ஆர்யா, முன்னதாக மீண்டும் டெடி பட இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் கேப்டன் திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் கேப்டன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கேப்டன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, சிம்ரன், காவியா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கேப்டன் படத்திற்கு யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய D.இமான் இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் ஆர்யாவின் கேப்டன் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா ஒரு பாடல் பாடியுள்ளார். இதுகுறித்து இசையமைப்பாளர் D.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “ஆர்யாவின் கேப்டன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் குரலை பதிவு செய்ததில் மிக்க மகிழ்ச்சி”யடைவதாக தெரிவித்துள்ளார்.

அழகான மெலடி பாடலாக உருவாகியிருக்கும் இப்பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் மற்றும் இசையமைப்பாளர் D.இமான் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இணைந்திருக்கும் அந்த புகைப்படம் இதோ…