தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா,ரசிகர்களால் செல்லமாக லேடி சூப்பர்ஸ்டார் என்று நயன்தாரா அழைக்கப்படுவார்.கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா.பெரிய ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

இவரது படங்கள் முன்னணி ஹீரோ படங்களுக்கு நிகராக வசூலிலும் சாதனை படைக்கும்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து அசத்தி விட்டார் நயன்தாரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து அசத்தி உள்ளார் நயன்தாரா.

இவர் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல்,O2 படங்கள் கடைசியாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து அட்லீ ஷாருக் கான் படம்,அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் கோல்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.தனது காதலர் விக்னேஷ் சிவனை சமீபத்தில் கரம்பிடித்தார் நயன்தாரா.

தற்போது நயன்தாரா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இவர் நடிக்கும் 75ஆவது படத்தினை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் Trident Arts நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.LadySuperstar75,N75 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை ஷங்கரின் முன்னாள் அஸோஸியேட் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார்.இந்த படத்தின் அறிவிப்பு வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்,ஜெய்,சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.