ஜீ தமிழில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த சீரியல்களில் ஒன்று யாரடி நீ மோஹினி.இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களுக்கு பரிட்சயமானவராக மாறியவர் நட்சத்திரா.இந்த தொடரில் இவரது நடிப்பினை பார்த்து இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

1000 எபிசோடுகளை கடந்த இந்த தொடர் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனார்.இந்த தொடரின் நிறைவுக்கு பிறகு சில மாதங்கள் பிரேக் எடுத்தார் நட்சத்திரா.அடுத்ததாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்து வரும் வள்ளி திருமணம் தொடரில் நடித்து வருகிறார்.

இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார்.இந்த தொடர் 150 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று வருகிறது.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

தற்போது இவருக்கும் விஸ்வா சாம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது என்ற தகவலை சில புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இவருக்கு பிரபலங்களும்,ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.