எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன்.இவர் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இவர்களுடன் நரைன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம்,காயத்ரி,பிக்பாஸ் ஷிவானி,மைனா,மஹேஸ்வரி VJ,ஸ்வாதிஷ்டா,ஸ்ரீகுமார்கணேஷ் என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.ஏற்கனவே கமல்,விஜய்சேதுபதி,பஹத் என பெரும் நடிகர்கள் இருக்கையில் சூர்யாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றியடைந்துள்ளது விக்ரம் படம்.

இந்த படத்தில் Rolex என்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து அடுத்தடுத்த படங்களுக்கு சூர்யா வழிவகுத்துள்ளார்.பல இடங்களில் இந்த படம் வசூல் சாதனை செய்துள்ளது.இந்த படத்தின் பின்னணி இசை அடங்கிய OST சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த OST Spotify தளத்தில் உலகளவில் அதிகம் கேட்கப்படும் டாப் 10 லிஸ்டில் வந்துள்ளது.இதனை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.