இயக்குனர் பாலா இயக்கி விஷால்-ஆர்யா நடிப்பில் உருவான திரைப்படம் அவன் இவன்.ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்த படம் சூப்பர்ஹிட் அடித்தது.இந்த படத்தின் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ராமராஜ்.

வங்கியில் மேலாளராக இருந்து வந்த இவர் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த இவர்,அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார்.தற்போது தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் , 72 வயதான இவர் சிகிச்சை பலன் இன்றி இவர் இன்று காலமாகியுள்ளார் என்ற சோக செய்தி கிடைத்துள்ளது.

இவரது மறைவு செய்தி திரையுலகில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இவரது இறுதிசடங்குகள் இன்று குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற உள்ளது.இவரது ஆத்மா சாந்தி அடைய ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து இறைவனை வேண்டி வருகின்றனர்.