தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அமீர்.இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக தனது திரைவாழ்க்கையை தொடங்கினார்.மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து ராம்,பருத்தி வீரன்,ஆதிபகவன் உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கி சூப்பர்ஹிட் இயக்குனராக வளம் வந்தார் அமீர்..தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார் அமீர்.இயக்குனராக மட்டுமல்லால் தயாரிப்பு,நடிகர் என பல பரிமாணங்களை ஏற்றுள்ளார் அமீர்.

வடசென்னை,மாறன் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல நடிகராகவும் அசத்தினார்.அடுத்ததாக சில படங்களில் அமீர் நடித்து வருகிறார்.தற்போது இவரது வீட்டில் நடைபெற்றுள்ள ஒரு சோக சம்பவம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இயக்குனர் அமீரின் தாயார்  வயதுமூப்பு காரணமாக காலமாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இவரது இறுதி சடங்குகள் மதுரையில் உள்ள அமீரின் வீட்டில் நடைபெறவுள்ளது என்றும் அவரது உடல் நெல்பேட்டை சுங்கம்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.அமீர் மற்றும் குடும்பத்தினருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.