தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து இவர் வம்சி இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் சில கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தன.இதனை தொடர்ந்து இவர் நடிக்கவுள்ள அடுத்த படங்களை இயக்கவுள்ளதாக தற்போதே சில பெயர்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.இதில் மாஸ்டர் படத்தினை இயக்கிய லோகேஷ் கனகராஜிற்கு தளபதி 67 படத்தினை அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மாஸ்டர் படத்தின் மிக பெரிய வெற்றியை அடுத்து இருவரும் மீண்டும் இணைவது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்,விஜய்சேதுபதி,பஹத்,சூர்யா என பலர் நடித்துள்ளனர்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அப்படி நமது கலாட்டாவிற்கு இயக்குனரும் லோகேஷின் நண்பருமான ரத்னகுமார் விக்ரம் குறித்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார்,அதில் அவரிடம் லோகேஷின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பியபோது சீக்கிரம் அதற்கான அப்டேட் வரும் என்றும் விக்ரமை விட செம மாஸான படமாக தளபதி 67 இருக்கும் என்றும் ஹிண்ட் கொடுத்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்