சன் டிவியில் ஒளிபரப்பான பெரிய ஹிட் தொடர்களில் ஒன்று நாயகி.இந்த தொடரில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் சுஷ்மா நாயர்.மாடலாகவும்,பேஷன் டிசைனராகவும் தனது மீடியா வாழ்க்கையை தொடங்கிய இவர் அடுத்து நடிகையாக நடித்து தனது முத்திரையை பதித்தார்.

சுமங்கலி தொடரில் சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இவர்,அடுத்ததாக நாயகி தொடரில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார்.இந்த தொடரை தொடர்ந்து தனது நீண்டநாள் காதலரான கிரிக்கெட் பயிற்சியாளர் லிஜோ டி ஜான் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் தொடரில் சிறிய முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார் சுஷ்மா.நடிப்பை தவிர குக்கிங்,பேஷன் டிசைனர் என தனது திறமைகளை நிரூபித்து கலக்கி வந்தார் சுஷ்மா.இவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார் சுஷ்மா.

திருமணத்துக்கு பிறகு தனது கணவருடன் இணைந்து எடுக்குக்கொண்ட முதல் போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்துள்ளார்,இந்த ரொமான்டிக் போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.தனது திருமணம் குறித்த வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார் சுஷ்மா இந்த வீடியோவும் வைரலாகி  வருகிறது.