தமிழ் சினிமாவின் நட்சத்திர கதாநாயகர் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் பிகில். தெறி மற்றும் மெர்சல் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் 3-வது படமாக பிகில் படத்தில் ராயப்பன் மற்றும் பிகில் (மைக்கேல்) என இரட்டை வேடங்களில் தளபதி விஜய் நடித்திருந்தார்.

மகளிர் கால்பந்தாட்டத்தை கதைக் களமாகக் கொண்டு வெளிவந்த பிகில் படத்தில் இந்துஜா, அமிர்தா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா, இந்திராஜா, காயத்ரி ரெட்டி, கனிமொழி, ஷோபனா ஆகியோர் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்தனர். இவர்களில் நடிகை காயத்ரி ரெட்டி அடுத்ததாக பிக் பாஸ் கவின் கதாநாயகனாக நடித்த லிப்ட் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார்.

தொடர்ந்து ஆக்ஷன் கிங் அர்ஜுன் முதல் முறை தொகுப்பாளராக களம் இறங்கிய சர்வர் நிகழ்ச்சியிலும் காயத்ரி ரெட்டி போட்டியாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து திரையுலகில் நடிகையாக தனது கவனத்தை செலுத்தி வரும் காயத்ரி ரெட்டிக்கு தற்போது திருமணம் நடைபெற உள்ளது.

நீண்ட நாள் காதலனை காயத்ரி ரெட்டி கரம் பிடித்துள்ளார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ காயத்ரி ரெட்டியின் திருமணம் இன்று செப்டம்பர் 29-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றுள்ளது. நடிகை காயத்ரி ரெட்டியின் திருமணத்திற்கு கலாட்டா குழுமம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
 

Officially introducing MY HUSBAND❤️#GayathriReddysWedding #gayathrireddyofficial#hitched pic.twitter.com/mq9QNAXHXk

— GayathriReddy (@GayathriReddy95) September 28, 2022