இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசை அமைத்து தமிழ் இசை ரசிகர்களுக்கு நிறைய ஃபேவரட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார்.

நடிகராக விஜய் ஆண்டனியின் நடிப்பில் அடுத்ததாக இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன் , மூடர்கூடம் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் உடன் இணைந்து விஜய் ஆண்டனி நடித்துள்ள அக்னிச்சிறகுகள் மற்றும் இயக்குனர் A.செந்தில்குமார் உடன் காக்கி ஆகிய திரைப்படங்கள் தயாராகின்றன.

மேலும் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை அடுத்து தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கும் விஜய் ஆண்டனி , இயக்குனர் சசி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகமாக பிச்சைக்காரன் 2 படத்தை இயக்குகிறார்.

விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாராகும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் கதை திரைக்கதை எழுதி இயக்குவதோடு இசையும் அமைத்து நடிக்கிறார் விஜய் ஆண்டனி.இந்நிலையில் பிச்சைக்காரன் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு தொடங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
music director actor vijay antony directorial debut pichaikkaran 2 begins with pooja