அரசியல் கட்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார்" என்று, நடிகர் பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ள திமுக, மிக சிறப்பாகவே ஆட்சி செய்து வருவதாகக் கடந்த மாதம் வரை அதிமுகவின் முக்கிய தலைவர்களே கருத்து கூறி வந்தனர். அந்த அளவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பாடுகள் இருப்பதாகவும், அதுவும் பாராட்டும் வகையில் இருப்பதாகவும், பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தான், “தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகள் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பதாக” ஜன சேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரரான பவன் கல்யாண், தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராகப் புகழ் பெற்றுத் திகழ்கிறார். 

இவர், ஜன சேனா என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கிய இவரின் கட்சிக்கு தற்போது ஒரு எம்.எல்.ஏ.வும் இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் தான், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை அரசியல் பணிக்காகப் பவன் கல்யாண் பாராட்டியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

“அன்புக்குரிய தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால், அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது.

உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

பவன் கல்யாண்
தலைவர், ஜனசேனா” 

என்று, தனது வாழ்த்தில் நடிகர் பவன் கல்யாண் தெரித்துள்ளார்.

இதனிடையே, மு.க. ஸ்டாலினை நடிகர் பவன் கல்யாண் பாராட்டி உள்ளது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.