தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான திரைப்படம் காதல். நடிகர் பரத் கதாநாயகனாக நடித்த காதல் திரைப்படத்தில் நடிகை சந்தியா கதாநாயகியாக அறிமுகமானார்.

இத்திரைப்படத்தில் நடிகர் பரத் மெக்கானிக்காக நடித்திருப்பார். அந்த மெக்கானிக் கடையில் அவருடன் வேலை பார்க்கும் கர்ட்டாண்டி எனும் சிறுவனாக நடித்த நடிகர் அருண்குமார். தூத்துக்குடியை சேர்ந்த அருண்குமார் காதல் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் அருண் குமார் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் அசின் நடித்த சிவகாசி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தாலும் அதன்பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த அருண் குமார் இப்போதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அருண் குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இரண்டு வருடங்களாக காதலித்த பெண்ணை மணமுடித்துள்ளார் நடிகர் அருண் குமாரின் திருமணத்தில் காதல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சுகுமாரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.