2013-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சித்தார்த் விபின். மேலும் அத்திரைப்படத்துக்கு இசையமைத்து படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். ஒரே படத்தில் சித்தார்த் விபின் நடிப்பும், இசையும் பேசப்பட்டது.

அதைத்தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், காஷ்மோரா, ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட பல படங்களில் நடிகராகவும் இசையமைத்தும் வருகிறார். குறிப்பாக வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்திடம் சித்தார்த் விபினும் அவரது டீம்மும் சிக்கி சின்னாபின்னமாக காட்சி கதற வைக்கும்.

இந்நிலையில் சித்தார்த் விபினுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. சித்தார்த் விபினுக்கும் ஷ்ரேயா என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் முழுக்க முழுக்க கேரள ஸ்டைலில் நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது.

சித்தார்த் விபினின் நெருங்கிய நண்பரும் நடிகருமான நகுல், இன்று எங்களுக்கு ஸ்பெஷலான நாள். என்னுடைய சகோதரர். எனது குழந்தையின் காட்ஃபாதர், மிகத்திறமை வாய்ந்த இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கும் ஸ்ரியாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்தோம். இருவரும் அன்பு மகிழ்ச்சி மற்றும் வெற்றி பெற வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். 

தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் சித்தார்த் விபின். திரைப்பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கோகுல் இயக்கத்தில் தயாராகி வரும் கொரோனா குமார் படத்திற்கும் இவர் தான் இசையமைப்பாளர் என்று கூறப்படுகிறது.