சினிமா மக்கள் தங்கள் கவலையை மறந்து ரசிக்கும் ஒரு அற்புதமான பொழுதுபோக்கு அம்சம்.பல படங்கள் மக்களை மகிழ்வித்து உள்ளது,அவர்களுக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்தும் உள்ளது.வார வாரம் பல மொழிகளில் பல படங்கள் வெளியாகி வருகின்றன.

அப்படி மக்களை மகிழ்விக்கும் சினிமாவை திரையரங்கில் சிறந்த தொழில்நுட்பத்தோடு கொண்டாடுவது மக்களின் வழக்கம்.காலப்போக்கில் பல தொழில்நுட்பங்கள்,ஜி எஸ் டி வரி போன்றவற்றால் சினிமா டிக்கெட் விலை உயர்ந்தது.இதானால் சினிமா பார்க்கும் மக்கள் கூட்டம் கணிசமாக குறைந்தது.

100 ரூபாய்க்கு சினிமா பார்ப்பதை ரசிகர்கள் பலரும் மிஸ் செய்து வந்தனர்.தேசிய சினிமா தினம் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.இதனை முன்னிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு விஷயத்தை திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

செப்டம்பர் 16ஆம் தேதி தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள அனைத்து MultiPlex மற்றும் சினிமா தியேட்டர்களில் 75 ரூபாய்க்கு விற்கப்படும் என்ற சலுகையை அறிவித்துள்ளனர்.கடினமான கொரோனா காலகட்டத்தை கடந்து திரையரங்குகள் வெற்றிகரமாக சென்று வருவதற்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த சலுகையை அறிவித்துள்ளனர்.

இந்த சலுகை டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு பொருந்தும்,ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு ஜி எஸ் டி உள்ளிட்ட வரிகள் போன்ற கூடுதல் கட்டணம் இருக்கும் என்பதால் அவர்களுக்கு இந்த சலுகை செல்லாது.PVR,Inox,Cinepolis உள்ளிட்ட பல பெரிய Multiplex-களும் இந்த சலுகையை அமல்படுத்தவுள்ளனர்.