பிரபல Radio தொகுப்பாளராக இருந்து ,சினிமாவில் காமெடியனாக மாறி LKG படத்தின் மூலம் ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் RJ பாலாஜி.இவர் ஹீரோவாக நடித்த LKG திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

இதனை தொடர்ந்து RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார்.RJ பாலாஜியுடன் இணைந்து NJ சரவணனும் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயரிட்டுள்ளனர்.நயன்தாரா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மூக்குத்தி அம்மன் படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது.இந்த படம் தீபாவளி அன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படம் ஹாட்ஸ்டார் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையை பெற்றுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.நயன்தாராவின் பிறந்தநாள் பரிசாக இதனை நயன்தாரா ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.