தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நந்தமுரி தாரக ரத்னா திடீரென காலமானார்! சோகத்தில் திரையுலகம்

பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி தாரக ரத்னா காலமானார்,telugu actor nandamuri taraka ratna passed away due to cardiac arrest | Galatta

தெலுங்கு சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நந்தமுரி தாரக ரத்னா திடீரென மாரடைப்பால் காலமானார். தெலுங்கு திரை உலகின் உச்ச நட்சத்திர நாயகராகவும் ஆந்திராவின் முன்னால் முதலமைச்சராகவும் திகழ்ந்த என்.டி.ராமராவ் அவர்களின் மகனும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளருமான நந்தாமுரி மோகன் கிருஷ்ணாவின் மகனாக பிறந்தவர் நந்தமுரி தாரக ரத்னா. கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் கோடன்டாராமி ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த ஒக்கடோ நம்பர் குற்ராடு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக செந்தாமரை தாரக ரத்னா அறிமுகமானார்.

தொடர்ந்து யுவரத்னா, தாரக், நோ, பத்ராத்திரி ராமுடு, பகடை, அமராவதி, வெங்கடாதிரி, முக்கான்ட்டி, நந்தீஸ்வரடு, ஏற்று லெனி அலெக்சாண்டர், மகாபக்த சரியலா, எவரா மன்மந்தா, ராஜா செய்யவஸ்தே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நந்தமுரி தாரக ரத்னா நடித்துள்ளார். கடைசியாக கடந்த 2022ம் ஆண்டில் சாரதி மற்றும் எஸ்5 நோ எக்ஸிட் ஆகிய திரைப்படங்கள் நடிகர் நந்தமுரி தாரக ரத்னா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் திடீரென நடிகர் நந்தமுரி தாரக ரத்னா உயிரிழந்த செய்தி தற்போது தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான மதிப்பிற்குரிய திரு.சந்திரபாபு நாயுடு அவர்களின், மகன் நாரா லோகேஷ் தனது யுவகாலம் பாதயாத்திரை தொடங்கினார். இதனை அடுத்து நாரா லோகேஷ் தொடங்கிய யுவகாலம் பாத யாத்திரையில் கடந்த ஜனவரி 27ஆம் தேதி நடிகர் நந்தமுரி தாரக ரத்னா கலந்து கொண்டார். குப்பம் பகுதியில் நடைபெற்ற பாத யாத்திரையின் பேரணியில் பங்கேற்ற நடிகர் நந்தமுரி தாரக ரத்னா அடுத்த சில நேரத்தில் திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். எனவே தெலுங்கு தேசம் கட்சியினர் உடனடியாக நந்தமுரி தாரக ரத்னாவை குப்பம் பகுதியில் இருந்து பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் நந்தமுரி தாரக ரத்னா அவர்களுக்கு பெங்களூருவின் நாராயணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கடந்த 23 நாட்களாக சிறப்பு மருத்துவர் குழு மற்றும் வெளிநாட்டில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களது மேற்பார்வையில் நடிகர் நந்தமுரி தாரக ரத்னாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து கோமா நிலையில் இருந்த நடிகர் நந்தமுரி தாரக ரத்னாவிற்கு வென்டிலேட்டரில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பல பரிசோதனைகளுக்கு பிறகு நடிகர் நந்தமுரி தாரக ரத்னாவிற்கு மெலினா என்னும் நோய் பாதிக்கப்பட்டு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

தீவிர சிகிச்சைகளால் உடல் நலம் தேறி வந்த நடிகர் நந்தமுரி தாரக ரத்னாவின் உடல்நிலை கடந்த சில தினங்களில் மீண்டும் மோசமடைந்தது. திடீரென நடிகர் நந்தமுரி தாரக ரத்னாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், நேற்று பிப்ரவரி 18ஆம் தேதி சனிக்கிழமை அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டது. நடிகர் நந்தமுரி தாரக ரத்னாவின் திடீர் மறைவு தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த நடிகர் நந்தமுரி தாரக ரத்னா அவர்களுக்கு தெலுங்கு சினிமா ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கலாட்டா குழுமமும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
 

குக் வித் கோமாளி முதல் எலிமினேஷனில் சிவாங்கியை குறிப்பிட்டு பரவும் சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த கிஷோர் ராஜ்குமார்! விவரம் உள்ளே
சினிமா

குக் வித் கோமாளி முதல் எலிமினேஷனில் சிவாங்கியை குறிப்பிட்டு பரவும் சர்ச்சைகளுக்கு விளக்கமளித்த கிஷோர் ராஜ்குமார்! விவரம் உள்ளே

சினிமா

"அமைதியா HARD WORK பண்ணுங்க RESULT சத்தம் போடட்டும்!"- சிலம்பரசன்TRன் லேட்டஸ்ட் மாஸ் பதிவால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

சினிமா

"வாரிசு வெற்றிக்கு தளபதி விஜய் கொடுத்த முத்தம்!"- ட்ரெண்டாகும் பாடலாசிரியர் விவேக் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!