'வீரன் படம் COPY தான்..!'- கோபமடைந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி... மின்னல் முரளி இயக்குனரின் பதில் என்ன?- ட்ரெண்டாகும் கலகலப்பான வீடியோ இதோ

வீரன் குறித்து மின்னல் முரளி இயக்குனர் பேசும் புது ப்ரோமோ வீடியோ,minnal murali director clarifies hip hop tamizha adhi in veeran not a copy | Galatta

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வித்தியாசமான சூப்பர் ஹீரோ படமாக தயாராகி இருக்கும் வீரன் திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்த மின்னல் முரளி திரைப்படத்தின் COPY என பரவும் செய்திகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் வீரன் படக் குழுவினர் கலகலப்பான ப்ரோமோ வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ள வீரன் படம் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட வருகிற வெள்ளிக் கிழமை ஜூன் 2ம் தேதி வீரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. மரகத நாணயம் திரைப்படத்தின் இயக்குனர் ARK.சரவண் எழுதி இயக்கியுள்ள வீரன் திரைப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபக் D மேனன் ஒளிப்பதிவில் பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்ய, வீரன் திரைப்படத்திற்கு மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் வீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் ஒருபுறம் மலையாளத்தில் வெளிவந்த டொமினோ தாமஸின் மின்னல் முரளி திரைப்படத்தின் சாயல் அதிகம் இருப்பதாக குறிப்பிட்டு மின்னல் முரளி படத்தின் COPY தான் வீரன் என ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது. இதனிடையே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் தளமான புக் மை ஷோ மற்றும் இதர பிற தளங்களில் வீரன் திரைப்படத்தின் கதை சுருக்கம் (SYNOPSIS) வெளியாகியுள்ளது. அதன் படி “கதையின் நாயகனான குமரன் 15 வயது சிறுவனாக வீரனூர் எனும் கிராமத்தில் வசிக்கும் போது மின்னலால் தாக்கப்பட்டு சிறிய கோமா நிலைக்கு செல்கிறான். உடல்நிலை சரியான பிறகு அவனுடைய சகோதரி அவனை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்கிறார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவன் அந்த மின்னல் தாக்கப்பட்டதால் அவனுக்கு மின்னலின் சக்தி மற்றும் மனதை கட்டுப்படுத்துவது போன்ற சூப்பர் பவர்கள் இருப்பதாக உணர்கிறான்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வீரன் திரைப்படம் உண்மையிலேயே மின்னல் முரளி திரைப்படத்தின் COPY தானா என்பது போல ஹிப் ஹாப் தமிழா ஆதி மிகவும் கோபமாக இயக்குனரிடம் கேட்க அதற்கு இயக்குனர் மின்னல் முரளி படத்தின் இயக்குனர் பெசில் ஜோசப்புக்கு வீடியோ கால் செய்து பேசும் கலகலப்பான புரோமோ வீடியோவை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் பேசிய மின்னல் முரளி படத்தின் இயக்குனர் பேசில் ஜோசப், "வீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் பார்த்தேன் நன்றாக இருந்தது. இயக்குனர் ஏற்கனவே என்னிடம் வீரன் படத்தின் கதையை சொல்லி இருக்கிறார். மின்னல் முரளி படத்திற்கும் வீரன் படத்திற்கும் சம்பந்தமே இல்லை. நீங்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம்" என தெரிவித்துள்ளார். சற்று முன்பு வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த வீரன் படக்குழு , மின்னல் முரளி இயக்குனரின் கலகலப்பான அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

வேகமெடுக்கும் சுதா கொங்கராவின் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்... ஜீவி பிரகாஷ் குமாரின் அட்டகாசமான புது அறிவிப்பு இதோ!
சினிமா

வேகமெடுக்கும் சுதா கொங்கராவின் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்... ஜீவி பிரகாஷ் குமாரின் அட்டகாசமான புது அறிவிப்பு இதோ!

இறுதிக்கட்டத்தில் சமுத்திரக்கனி - பவர்ஸ்டார் பவன் கல்யாணின் புதிய படம்... வினோதய சித்தம் ரீமேக்கின் லேட்டஸ்ட் மாஸ் அப்டேட்!
சினிமா

இறுதிக்கட்டத்தில் சமுத்திரக்கனி - பவர்ஸ்டார் பவன் கல்யாணின் புதிய படம்... வினோதய சித்தம் ரீமேக்கின் லேட்டஸ்ட் மாஸ் அப்டேட்!

சுனைனாவின் அதிரடி அவதாரமாக வரும் ரெஜினா... புதிய த்ரில்லர் பட விறுவிறுப்பான டீசர் இதோ!
சினிமா

சுனைனாவின் அதிரடி அவதாரமாக வரும் ரெஜினா... புதிய த்ரில்லர் பட விறுவிறுப்பான டீசர் இதோ!