இறுதிக்கட்டத்தில் சமுத்திரக்கனி - பவர்ஸ்டார் பவன் கல்யாணின் புதிய படம்... வினோதய சித்தம் ரீமேக்கின் லேட்டஸ்ட் மாஸ் அப்டேட்!

சமுத்திரக்கனி பவன் கல்யாணின் ப்ரோ பட டப்பிங் ஆரம்பம்,samuthirakani pawan kalyan in bro movie dubbing works started | Galatta

தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் தொடர்ந்து நல்ல படைப்புகளை கொடுத்து வரும் இயக்குனராகவும் திகழும் சமுத்திரகனி அவர்கள் இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் சாய் கேஜ் இணைந்து நடித்துள்ள ப்ரோ திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியானது. முன்னதாக இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் வெளியிடாக அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தில் காவல்துறை அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்த சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்த நான் கடவுள் இல்லை & தலைகூதல் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன. தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான வாத்தி மற்றும் நானி நடிப்பில் வெளிவந்த தசரா ஆகிய படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்த சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விமானம் திரைப்படம் வருகிற ஜூன் 9ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. 

மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே சமயத்தில் இயக்க வரும் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக மாத்தி யோசி மற்றும் ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட படங்களின் இயக்குனரும், பாலிவுட்டில் டாப்சி நடிப்பில் வெளிவந்த ராஷ்மி ராக்கெட் படத்தின் கதாசிரியருமான இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய த்ரில்லர் படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.  விரைவில் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே இயக்குனராக தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் தனது திரைப் பயணத்தில் 31வது படமாக நடிக்கும் புதிய PSPK31 திரைப்படத்தை சமுத்திரக்கனி இயக்கி வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி நடித்து நேரடியாக ZEE5 தளத்தில் வெளிவந்து ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வினோதய சித்தம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக சமுத்திரகனி இயக்கும் இந்த PSPK31 படத்திற்கு ப்ரோ என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழில் வினோதய சித்தம் திரைப்படத்தில் சமுத்திரக்கனி நடித்த வேடத்தில் ப்ரோ படத்தில் பவன் கல்யாண் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து பிரபல தெலுங்கு நடிகர் சாய் தேஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமுத்திரக்கனியின் கதையில் உருவாகும் இந்த ப்ரோ திரைப்படத்திற்கு திரைக்கதை & வசனம் எழுதியிருக்கிறார் பிரபல தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ். பீப்பிள் மீடியா ஃபாக்டரி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த ப்ரோ திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். வருகிற ஜூலை 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ப்ரோ திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கும் ப்ரோ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி இருப்பதாக பட குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் டப்பிங்கை தொடங்குவதற்கு முன்பு நடந்த பூஜை புகைப்படங்களை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இதோ…
 

#BRO 💪💪💪❤️❤️❤️ DUBBING STARTED…,🙏 pic.twitter.com/MlpxsZarq4

— P.samuthirakani (@thondankani) May 30, 2023

ரிலீஸுக்கு ரெடியான ஆர்யாவின் ACTION PACKED காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்… சென்சார் குறித்த அதிரடி அறிவிப்பு இதோ!
சினிமா

ரிலீஸுக்கு ரெடியான ஆர்யாவின் ACTION PACKED காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்… சென்சார் குறித்த அதிரடி அறிவிப்பு இதோ!

ஆஸ்கார் வென்ற RRR, பாகுபலி இசையமைப்பாளர் MM.கீரவாணியின் மனதை வென்ற பிரபல தமிழ் இசையமைப்பாளர்! யார் தெரியுமா? வீடியோ இதோ
சினிமா

ஆஸ்கார் வென்ற RRR, பாகுபலி இசையமைப்பாளர் MM.கீரவாணியின் மனதை வென்ற பிரபல தமிழ் இசையமைப்பாளர்! யார் தெரியுமா? வீடியோ இதோ

“கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்!” பட மிரட்டலான லுக்கில் வந்த தனுஷ்... சோசியல் மீடியாவை அதிரவிடும் ட்ரெண்டிங் வீடியோ இதோ!
சினிமா

“கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்!” பட மிரட்டலான லுக்கில் வந்த தனுஷ்... சோசியல் மீடியாவை அதிரவிடும் ட்ரெண்டிங் வீடியோ இதோ!