சச்சின் ANTHEMக்கு பின் மீண்டும் இணைந்த தனுஷ் - அனுஷ்கா காம்போ... ரசிகர்களை  உற்சாகப்படுத்திய புது பாடல் இதோ!

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் தனுஷ் பாடிய பாடல்,Anushka in miss shetty mr polishetty hathividi song sung by dhanush | Galatta

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கம் பேக் கொடுத்து இருக்கும் நடிகை அனுஷ்கா நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைப்படத்தில் தனுஷ் பாடிய “என்னடா நடக்குது” எனும் பாடல் தற்போது வெளியானது. தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர கதாநாயகியாக திகழும் நடிகை அனுஷ்கா தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரெண்டு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கினார். தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நாயகர்களுடன் இணைந்து நடித்து நட்சத்திர கதாநாயகியாக உயர்ந்த அனுஷ்காவின் திரை பயணத்தில் மைல்கல்லாக அமைந்த திரைப்படம் அருந்ததி. பக்கா ஆக்ஷன் ஃபேண்டஸி திரைப்படமாக வெளிவந்த அருந்ததி திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகி அனுஷ்காவை இந்திய அளவில் மிகப்பெரிய கதாநாயகியாக உயர்த்தியது. அருந்ததி படம் போலவே பஞ்சாக்ஷ்ரி, சந்திரமுகியின் தெலுங்கு வெர்ஷனாக நாகவல்லி, ருத்ர மாதேவி ஆகிய படங்களில் வரிசையாக நடித்தார் அனுஷ்கா.

மறுபுறம் தமிழில் தளபதி விஜயுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் 1,2&3 , சீயான் விக்ரமுடன் தெய்வத்திருமகள் மற்றும் தாண்டவம், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லிங்கா, அஜித் குமார் உடன் என்னை அறிந்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக கலக்கிய அனுஷ்கா இந்திய சினிமாவின் மாபெரும் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களாக எப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாகுபலி 1&2 திரைப்படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார். கடைசியாக அனுஷ்கா நடித்த பாகமதி திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீசானது. தொடர்ந்து மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடித்த நிசப்தம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. எனவே கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது அனுஷ்காவின் புதிய திரைப்படமான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் திரைக்கு வர தயாராகி வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி (அனுஷ்கா 48) திரைப்படம் அறிவிக்கப்பட்டது. இயக்குனர் மகேஷ் பாபு.P இயக்கத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தில் ஸ்ரீ சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா மற்றும் ஜாதி ரத்தினலு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரதன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்திற்கு கோட்டாகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். 

வெகு விரைவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தில் நடிகர் தனுஷ் பாடியுள்ள “என்னடா நடக்குது” எனும் ஒரு பாடல் தற்போது வெளிவந்துள்ளது. முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ் - அனுஷ்கா  காம்போவில் அனிருத் இசையில் ஆலபம் பாடலாக வெளிவந்து ஹிட்டடித்த சச்சின் ANTHEM பாடலுக்கு பிறகு மீண்டும் தனுஷ் - அனுஷ்கா காம்போ மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்திற்காக இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்திற்காக தனுஷ் பாடிய அந்த பாடல் இதோ…

 

சுனைனாவின் அதிரடி அவதாரமாக வரும் ரெஜினா... புதிய த்ரில்லர் பட விறுவிறுப்பான டீசர் இதோ!
சினிமா

சுனைனாவின் அதிரடி அவதாரமாக வரும் ரெஜினா... புதிய த்ரில்லர் பட விறுவிறுப்பான டீசர் இதோ!

கங்குவா தயாரிப்பாளரின் அசத்தலான புதிய தெலுங்கு படம்... ஆனால் இது டெடி ரீமேக் அல்ல! கவனம் ஈர்க்கும் கலக்கலான GLIMPSE இதோ
சினிமா

கங்குவா தயாரிப்பாளரின் அசத்தலான புதிய தெலுங்கு படம்... ஆனால் இது டெடி ரீமேக் அல்ல! கவனம் ஈர்க்கும் கலக்கலான GLIMPSE இதோ

ரிலீஸுக்கு ரெடியான ஆர்யாவின் ACTION PACKED காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்… சென்சார் குறித்த அதிரடி அறிவிப்பு இதோ!
சினிமா

ரிலீஸுக்கு ரெடியான ஆர்யாவின் ACTION PACKED காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்… சென்சார் குறித்த அதிரடி அறிவிப்பு இதோ!