வேகமெடுக்கும் சுதா கொங்கராவின் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்... ஜீவி பிரகாஷ் குமாரின் அட்டகாசமான புது அறிவிப்பு இதோ!

சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் பாடல் பதிவு குறித்து ஜீவி பிரகாஷ்,sudha kongara in soorarai pottru hindhi remake song update by gv prakash | Galatta

பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த ஃபேவரட் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என தொடர்ச்சியாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஜீவி பிரகாஷ் குமார், இந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை தனுஷ் நடிப்பில் வெளிவந்து 100 கோடி வசூல் செய்த வாத்தி, ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ருத்ரன் மற்றும் சமீபத்தில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த மாடர்ன் லவ் சென்னை எனும் ஆன்தாலாஜி வெப் சீரிஸுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் ஓரிரு தினங்களுக்கு முன்பு இயக்குனர் AL.விஜய் இயக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங், நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன் & மேகா ஆகாஷ் ஆகியோர் இணைந்து நடித்த ஹாரர் திரில்லர் படமாக நேரடியாக ஜியோ சினிமா தளத்தில் வெளிவந்த பூ (BOO) திரைப்படத்தின் பாடல்களுக்கும் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூர்யா - இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் வாடிவாசல், இயக்குனர் பா.ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியில் பக்கா பீரியட் ஆக்சன் படமாக தயாராகி வரும் தங்கலான், கார்த்தியின் 25 வது படமாக தயாராகி வரும் ஜப்பான், தனுஷ் நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகும் கேப்டன் மில்லர், இயக்குனர் வசந்த பாலனின் அநீதி, இயக்குனர் தங்கர்பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, ஜெயம் ரவியின் சைரன், உலக நாயகன் கமல்ஹாசன் உடன் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கும் SK21, விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வித்தியாசமான டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக வரும் மார்க் ஆண்டனி, ஆர்யா நடிப்பில் வரும் ஜூன் இரண்டாம் தேதி ரிலீசாகும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம், ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1, கங்கணா ரணாவத் நடிப்பில் இந்திரா காந்தி அம்மையாரின் பயோபிக் படமாக தயாராகும் எமர்ஜென்சி என அடுத்தடுத்து அட்டகாசமான படைப்புகள் ஜீவி பிரகாஷின் இசையில் தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்காக உருவாகி வரும் பாலிவுட் படத்திற்கும் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த சூரரைப் போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றதோடு விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டுகளை குவித்தது. கேப்டன் GR.கோபிநாத்தின் சிம்ப்ளி ஃப்ளை: எ டெக்கான் ஒடிசி என்ற புத்தகத்தை தழுவி உருவான சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்காக முதல் தேசிய விருதை சூர்யா கைப்பற்றினார். மேலும் சிறந்த நடிகை, சிறந்த இசை அமைப்பாளர் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படம் என மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை சூரரை போற்று திரைப்படம் கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க சூரரைப் போற்று திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அபுடன்ட்டியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற செப்டம்பர் 1ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் இப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் படத்திற்காக ஒரு ஹிந்தி பாடல் பதிவு செய்யப்பட்டதாகவும், பாடலாசிரியர் மனோஜ் முன்தாசிர் சுக்லா எழுதிய இப்பாடலை கிங் மிக்கா சிங் பாடி இருப்பதாகவும் பாடல் பதிவின்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தோடு அறிவித்துள்ளார். ஜீவி பிரகாஷ் குமாரின் அந்த பதிவு இதோ…
 

Recorded @MikaSingh for #sooraraipottru Hindi song … lyrics by @manojmuntashir@Sudha_Kongara @akshaykumar @Abundantia_Ent @rajsekarpandian … lots of dhols on the wayyyyyy 🔥🔥🔥 pic.twitter.com/MA0YsLx8bZ

— G.V.Prakash Kumar (@gvprakash) May 30, 2023

கங்குவா தயாரிப்பாளரின் அசத்தலான புதிய தெலுங்கு படம்... ஆனால் இது டெடி ரீமேக் அல்ல! கவனம் ஈர்க்கும் கலக்கலான GLIMPSE இதோ
சினிமா

கங்குவா தயாரிப்பாளரின் அசத்தலான புதிய தெலுங்கு படம்... ஆனால் இது டெடி ரீமேக் அல்ல! கவனம் ஈர்க்கும் கலக்கலான GLIMPSE இதோ

ரிலீஸுக்கு ரெடியான ஆர்யாவின் ACTION PACKED காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்… சென்சார் குறித்த அதிரடி அறிவிப்பு இதோ!
சினிமா

ரிலீஸுக்கு ரெடியான ஆர்யாவின் ACTION PACKED காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்… சென்சார் குறித்த அதிரடி அறிவிப்பு இதோ!

ஆஸ்கார் வென்ற RRR, பாகுபலி இசையமைப்பாளர் MM.கீரவாணியின் மனதை வென்ற பிரபல தமிழ் இசையமைப்பாளர்! யார் தெரியுமா? வீடியோ இதோ
சினிமா

ஆஸ்கார் வென்ற RRR, பாகுபலி இசையமைப்பாளர் MM.கீரவாணியின் மனதை வென்ற பிரபல தமிழ் இசையமைப்பாளர்! யார் தெரியுமா? வீடியோ இதோ