சுனைனாவின் அதிரடி அவதாரமாக வரும் ரெஜினா... புதிய த்ரில்லர் பட விறுவிறுப்பான டீசர் இதோ!

சுனைனாவின் ரெஜினா பட டீசர் வெளியீடு,actress sunaina in regina movie teaser out now | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவரான நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்திருக்கும் ரெஜினா திரைப்படத்தின் டீசர் வெளியானது. ஆரம்பத்தில் தெலுங்கு திரை உலகில் நடிகையாக அறிமுகமாகி பின்னர் நடிகர் நகுல் கதாநாயகனாக நடித்த காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கியவர் நடிகை சுனைனா. தொடர்ந்து தனது இரண்டாவது தமிழ் படமாக மீண்டும் நடிகர் நகுல் உடன் இணைந்த சுனைனா நடித்த மாசிலாமணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் அருள்நிதி தனது முதல் படமாக அறிமுகமான வம்சம் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை சுனைனா அடுத்தடுத்து பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தெறி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகை சுனைனா அடுத்து ஜீவாவின் கவலை வேண்டாம், சமுத்திரக்கனியின் தொண்டன், விஜய் ஆண்டனியின் காளி, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா, இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளிவந்த சில்லு கருப்பட்டி, ட்ரிப் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.  கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு விஷால் காவல்துறை அதிகாரியாக நடித்து வெளிவந்த அதிரடி ஆக்சன் படமான லத்தி படத்தில் கதாநாயகியாக நடித்த சுனைனா நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் தான் ரெஜினா.

முற்றிலும் மாறுபட்ட புதிய அவதாரத்தில் நடிகை சுனைனா கதையின் நாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த ரெஜினா திரைப்படத்தை இயக்குனர் டாமின் டிசில்வா எழுதி இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து நிவாஸ் ஆதித்யன், ரித்து மந்த்ரா, ஆனந்த் நாக், தீனா, கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லத்துரை, அப்பாணி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் உள்ளிட்டோர் ரெஜினா திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். YELLOW BEAR PRODUCTION LLP நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சதீஷ் நாயர் தயாரித்துள்ள ரெஜினா திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பவி கே பவன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் டோபி ஜான் படத்தொகுப்பு செய்துள்ளார். 

தயாரிப்பாளர் சதீஷ் நாயர் அவர்களே ரெஜினா திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக பாடல்களுக்கு இசையமைத்து பின்னணி இசையும் சேர்த்து இருக்கிறார். கவிஞர் யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் R.இஜாஸ் என நான்கு பாடலாசிரியர்கள் ரெஜினா படத்தின் பாடல்களை எழுதி இருக்கின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் ரிலீசாக இருக்கும் சுனைனாவின் ரெஜினா திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட உள்ளது. இந்நிலையில் ரெஜினா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. விறுவிறுப்பான த்ரில்லர் படமாக தயாராகி இருக்கும் ரெஜினா திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சோசியல் மீடியாவில் வைரலாகும் சுனைனாவின் ரெஜினா படத்தின் டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

ஆஸ்கார் வென்ற RRR, பாகுபலி இசையமைப்பாளர் MM.கீரவாணியின் மனதை வென்ற பிரபல தமிழ் இசையமைப்பாளர்! யார் தெரியுமா? வீடியோ இதோ
சினிமா

ஆஸ்கார் வென்ற RRR, பாகுபலி இசையமைப்பாளர் MM.கீரவாணியின் மனதை வென்ற பிரபல தமிழ் இசையமைப்பாளர்! யார் தெரியுமா? வீடியோ இதோ

“கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்!” பட மிரட்டலான லுக்கில் வந்த தனுஷ்... சோசியல் மீடியாவை அதிரவிடும் ட்ரெண்டிங் வீடியோ இதோ!
சினிமா

“கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்!” பட மிரட்டலான லுக்கில் வந்த தனுஷ்... சோசியல் மீடியாவை அதிரவிடும் ட்ரெண்டிங் வீடியோ இதோ!

'நயன்தாராவை IMPRESS பண்ண என்ன செய்தீர்கள்?'- சுவாரஸ்யமாக பதிலளித்த விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ இதோ!
சினிமா

'நயன்தாராவை IMPRESS பண்ண என்ன செய்தீர்கள்?'- சுவாரஸ்யமாக பதிலளித்த விக்னேஷ் சிவனின் வைரல் வீடியோ இதோ!