தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் படம் 2021 பொங்கலுக்கு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து இவர் வம்சி இயக்கத்தில் தயாராகவுள்ள தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.இதனை தொடர்ந்து இவர் நடிக்கவுள்ள படங்களை இயக்கவுள்ளதாக தற்போதே சில பெயர்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இதில் மாஸ்டர் படத்தினை இயக்கிய லோகேஷ் கனகராஜிற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.இந்த படத்தினை மாஸ்டர் படத்தினை இணைந்து தயாரித்த லலித் குமார் தனது 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கவுள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த அவர் பேச்சு வார்த்தை போய்க்கொண்டிருக்கிறது விரைவில் அறிவிப்பு வரும் என்று தெரிவித்தார்.ஏற்கனவே விஜயை வைத்து சூப்பர்ஹிட் படம் கொடுத்த லோகேஷ் மீண்டும் அவருடன் இணையவிருப்பதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.