பார்வையாளர்களை வியக்க வைக்கும் வகையில் பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி இந்திய திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மஹதீரா & நான் ஈ ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 1&2 திரைப்படங்கள் இந்திய சினிமாவில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இதனையடுத்து அடுத்த பிரம்மாண்ட படைப்பாக இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவருகிறது RRR திரைப்படம். DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ள RRR திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

RRR படத்தில் ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்க, அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். RRR படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் KK.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் M.M.கீரவாணி இசையமைத்துள்ளார்.
 
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து மொழிகளில் வெளிவரும் RRR திரைப்படம் வருகிற மார்ச் 25-ம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவில் ரசிகர்கள் தற்போது மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அந்த வகையில் பிரபலமான BookMyShow தளத்தில் RRR திரைப்படம் இப்போதே 1 MILLION(10 லட்சம்) Interests  என புதிய சாதனை படைத்துள்ளது.  ரிலீசுக்கு முன்பே RRR திரைப்படம் நிகழ்த்தியுள்ள இந்த சாதனையால் ரிலீசுக்கு பிறகும் பாகுபலியை தாண்டி பாக்ஸ் ஆபீஸில் இமாலய சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.