தமிழ் திரை உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சீயான் விக்ரம் படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்கக்ஷையும் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  அந்த வகையில் அடுத்ததாக  ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளார்.

முன்னதாக இந்திய திரை உலகில் இதுவரை இல்லாத மிகப் பிரம்மாண்ட படைப்பாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் என முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இந்த ஆண்டு 2022 செப்டம்பர் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் டிமான்டி காலனி & இமைக்காநொடிகள் படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தில் பல வித்தியாசமான கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ளார். கோப்ரா திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த மகான் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றது . மகான் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் மகான் படத்திலிருந்து போனா போவுரா பாடல் வீடியோ தற்போது வெளியானது. அந்த பாடல் வீடியோ இதோ…