தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் அஜித் இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தினை போனி கபூர் தயாரித்திருந்தார்,எச் வினோத் இந்த படத்தினை இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் மிகவிரைவில் தொடங்கவுள்ளது.தற்போது அஜித் நடிக்கும் 62ஆவது படத்தின் அறிவிப்பு தற்ப்போது வெளியாகியுள்ளது.

முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் அஜித்துடன் முதல் முறையாக கைகோர்க்கின்றனர்.இந்த படத்தினை நானும் ரௌடி தான்,தானா சேர்ந்த கூட்டம்,காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

AK 62 என தற்காலிகமாக இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் 2022-ல் தொடங்கி , படம் 2023 பாதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விக்னேஷ் சிவன் போன்ற இளம் இயக்குனருடன் அஜித் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.