பவர் ஸ்டார் பவன் கல்யாண் - RRR தயாரிப்பாளரின் மெகா படத்தில் இணைந்த திமிரு & சுழல் நடிகை ஸ்ரியா ரெட்டி! அதிரடியான அறிவிப்பு இதோ

பவன் கல்யாணின் OG படத்தில் இணைந்த ஸ்ரியா ரெட்டி,shriya reddy joined with power star pawan kalyan in og movie | Galatta

RRR படத்தின் தயாரிப்பாளரின் அடுத்த படமாக தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஸ்ரியா ரெட்டி இணைந்துள்ளார். தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பீம்லா நாயக். மலையாளத்தில் பிரித்வி ராஜ் மற்றும் பிஜூ மேனன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்காக வெளிவந்த பீம்லா நாயக் திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தளபதி விஜயின் மெகா ஹிட் படமான தெறி திரைப்படத்தின் ரீமேக்காக உஸ்தாத் பகத் சிங் படத்தில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த உஸ்தாத் பகத் சிங் படத்தின் அறிவிப்பு டீசர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

இதனிடையே அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் ஹர ஹர வீர மல்லூ படத்திலும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அதே போல் தமிழில் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி நடித்து வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்த வினோதய சித்தம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக தற்போது உருவாகி வரும் ப்ரோ படத்திலும் பவன் கல்யாண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் அடுத்த அதிரடி திரைப்படமாக தயாராகி வரும் படம் தான் OG. இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான SS.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து உலக அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த RRR படத்தின் தயாரிப்பு நிறுவனமான DVV எனடர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் அடுத்த பிரம்மாண்ட படமாக உருவாகும் இந்த OG திரைப்படத்தை பிரபாஸின் சாகோ படத்தை இயக்கிய இயக்குனர் சுஜித் இயக்குகிறார்.

இந்த நிலையில் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் OG திரைப்படத்தில் நடிகை ஸ்ரியா ரெட்டி இணைந்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திமிரு திரைப்படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிக பிரபலமடைந்த நடிகை ஸ்ரகயா ரெட்டி தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் மற்றும் சில சமயங்களில் உள்ளிட்ட படங்களில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு Amazon prime வீடியோவில் வெளிவந்த சூழல் வெப் சீரிஸில் மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரியா ரெட்டி ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். தொடர்ந்து தற்போது கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க அதிரடி ஆக்சன் என்டர்டெய்னர் படமாக தயாராகி வரும் சலார் படத்தில் முக்கிய இடத்தில் நடித்து வரும் நடிகை ஸ்ரியா ரெட்டி தற்போது அடுத்த பிரம்மாண்ட படைப்பாக பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கும் திரைப்படத்திலும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக கைதி & மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து தனி கவனம் பெற்ற நடிகர் அர்ஜுன் தாஸ் OG திரைப்படத்தில் பவன் கல்யாண் உடன் இணைந்திருக்கும் நிலையில், நடிகை ஸ்ரியா ரெட்டியும் தற்போது இணைந்து இருப்பது இன்னும் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. நடிகை ஸ்ரேயா ரெட்டி OG திரைப்படத்தில் இணைந்திருப்பதை அறிவிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
 

 

Welcome aboard, @SriyaReddy!

Your presence in #OG will be a shocker and a banger. 🤙🏻 #FireStormIsComing 🔥#TheyCallHimOG 💥 pic.twitter.com/YMQwjsSk59

— DVV Entertainment (@DVVMovies) June 13, 2023

சினிமா

"அட அறிவு கெட்ட முட்ட..!"- மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ஆயுத எழுத்து பட அனுபவத்தை பகிர்ந்த சித்தார்த்! கலகலப்பான வீடியோ இதோ

KGF, காந்தாரா வரிசையில் ‘தூமம்’... கணிக்க முடியாத திரைக்கதையில் மிரட்டும் ஃபகத் பாசில்... – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

KGF, காந்தாரா வரிசையில் ‘தூமம்’... கணிக்க முடியாத திரைக்கதையில் மிரட்டும் ஃபகத் பாசில்... – வைரலாகும் வீடியோ உள்ளே..

ரசிகர்கள் எதிர்பார்த்த ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ரிலீஸ் எப்போது..? சர்ப்ரைஸாக வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

ரசிகர்கள் எதிர்பார்த்த ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ரிலீஸ் எப்போது..? சர்ப்ரைஸாக வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!