நீண்ட நாளுக்கு பின் தமிழில் ஹிட் கொடுத்த சித்தார்த்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – டக்கர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் உள்ளே..

முதல் நாள் வசூலில் கவனம் பெரும் சித்தாத்தின் டக்கர் விவரம் உள்ளே - Siddharth Takkar movie First day worldwide collection report | Galatta

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து பல ஆண்டுகளாக முன்னணியில் வலம் வரும் நடிகர் சித்தார்த். பாய்ஸ் படம் முதல் சம கால திரைப்படங்கள் வரை இன்றும் ரசிகர்களால் இளைமை ததும்பும் நடிப்பை வெளிபடுத்தும் நடிகர் என்று போற்றப்பட்டு வருகிறார் சித்தார்த். தற்போது சித்தார்த் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து ‘டெஸ்ட்’ படத்தில் நடிகர்கள் மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோருடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்து வருகிறார். பின்னர் ‘சேதுபதி’ பட இயக்குனர் S.U.அருண் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சித்தா’ திரைப்படத்திலும் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சித்தார்த் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சித்தார்த் பக்கா ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘டக்கர்’  பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தினை இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். படத்தில் சித்தார்த் அவருடன் இணைந்து திவ்யன்ஷா கதாநாயகியாக நடிக்க மேலும் படத்தில் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய  ஜி.ஏ.கௌதம் படத்தொகுப்பு செய்துள்ளார்.மேலும் இசையமைப்பாளர்  நிவாஸ்.கே.பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  

 

Massive Response For #Takkar♥️

Worldwide Day 1 Collection 2.43 Cr+ 🔥

Directed by @Karthik_G_Krish
🌟#Siddharth@iYogiBabu @itsdivyanshak @nivaskprasanna @editorgowtham @Sudhans2017 @thinkmusicindia @jayaram_gj @vijaytelevision @Donechannel1 pic.twitter.com/SHbC8ity6H

— Passion Studios (@PassionStudios_) June 10, 2023

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான டக்கர் திரைப்படம் கடந்த ஜூன் 8ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. ரசிகர்களின் நல்ல வரவேற்பையடுத்து பல இடங்களில் டக்கர் திரைப்படம் ஹவுஸ் புல்லாக இருந்து வருகிறது நீண்ட நாளுக்கு பின் தமிழில் சித்தார்த் அவர்களுக்கு ஒரு ஹிட் அடித்துள்ளது ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. இந்நிலையில் சித்தார்த் நடிப்பில் வெளியான டக்கர் திரைப்படம் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு, அறிவிப்பின் படி டக்கர் திரைப்படம் உலகமெங்கும் முதல் நாளில் ரூ. 2.43 கோடி வசூல் பெற்றுள்ளது, முதல் நாளை காட்டிலும் இரண்டாவது நாள் வரவேற்பு ரசிகர்களிடம் அதிகம் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது. 

KGF, காந்தாரா வரிசையில் ‘தூமம்’... கணிக்க முடியாத திரைக்கதையில் மிரட்டும் ஃபகத் பாசில்... – வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

KGF, காந்தாரா வரிசையில் ‘தூமம்’... கணிக்க முடியாத திரைக்கதையில் மிரட்டும் ஃபகத் பாசில்... – வைரலாகும் வீடியோ உள்ளே..

ரசிகர்கள் எதிர்பார்த்த ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ரிலீஸ் எப்போது..? சர்ப்ரைஸாக வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

ரசிகர்கள் எதிர்பார்த்த ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட ரிலீஸ் எப்போது..? சர்ப்ரைஸாக வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

ஆஞ்சநேயருக்கு ஆதிபுருஷ் டிக்கெட்..! திரையரங்குகளில் இருக்கை காலியாக விட படக்குழு முடிவு – விவரம் உள்ளே..
சினிமா

ஆஞ்சநேயருக்கு ஆதிபுருஷ் டிக்கெட்..! திரையரங்குகளில் இருக்கை காலியாக விட படக்குழு முடிவு – விவரம் உள்ளே..