“வடிவேலு காமெடி வெச்சதால அந்த படம் ஓடல..” உண்மையை உடைத்த சுந்தர் சி – சுவாரஸ்யமான தகவல் கொண்ட நேர்காணல் இதோ..

வடிவேலு காமெடி காட்சி இல்லாததற்கு இது தான் காரணம் சுந்தர் சி விளக்கம் - Sundar c about nagaram movie vadivelu comedy | Galatta

90 களின் சிறந்த இயக்குனர்களின் வரிசையில் ஒருவராக வலம் வந்து இன்று வரை ரசிகர்களின் ஆதரவை பெற்று முன்னணியில் இருக்கும் இயக்குனர் சுந்தர் சி.  1995 ல் வெளியான ‘முறைமாமன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தொடர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் கவனம் பெற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கமல் ஹாசன், அஜித் குமார் என்று உச்சபட்ச ஸ்டார்களை இயக்கி தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரானர். இன்றும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் சுந்தர் சி. இயக்குனராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2006 ம் ஆண்டு வெளியான ‘தலை நகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சுந்தர் சி பல ஹிட் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக இன்று வரை இருந்து வருகிறார். ஒரு புறம் இயக்குனராக தற்போது அரண்மனை 4 படத்தை இயக்கி வரும் சுந்தர் சி, அதே நேரத்தில் அவரது திரைப்பயணத்தில் ஹிட் திரைப்படமான ‘தலைநகரம் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி அவர்கள் தான் நடித்து வெளியாகவிருக்கும் தலைநகரம் 2 திரைப்படம் குறித்தும் தன் திரைப்பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டார், இந்த பேட்டியில் தலைநகரம் 2 படத்தில் ஏன் வைகை புயல் வடிவேலு இடம் பெறவில்லை என்ற கேள்விக்கு,

"இந்த படத்துல வடிவேலு சாருக்கு எதுவும் வைக்க முடியல.. எனக்கு ஒரு வருத்தம் இருந்தது. நான் நகரம் னு ஒரு படம் பண்ணேன். அந்த படத்துல வர கமெடியெல்லாம் இப்ப வரைக்கும் பிரபலம். ஆனா இந்த நிமிஷம் வரைக்கும் காமெடி ட்ராக் வெச்சதால அந்த படம் ஓடல. சில படங்களில் அந்த காமெடி ட்ராக் அமையும்.

தலைநகரம் படத்துல பார்த்த இரண்டாம் பாதியில் நகர்வு இல்லாமல் இருந்தது. அதனால் தான் வடிவேலு கதாபாத்திரத்திரம் வந்தது. நாய் சேகர் கதாபாத்திரம் நல்லா வந்தது. படம் பண்ணும்போது அது நல்லாருந்தது. அதனால் இரண்டாம் பாதியில் இருந்த கதாபாத்திரத்தை முதல்பாதிக்கும் சேர்த்து எழுதுனோம். அது அமைஞ்சது. சில படங்களுக்கு அது தேவையில்லை..  

நகரம் படத்துல அதனால் தான் வேலைக்கு ஆகல..  படத்தோட காட்சியே 2 மணி நேரம். ஆனா காமெடி 45 நிமிஷம். அப்போ படத்தோட சில காட்சிகளை சுருக்க வேண்டிய நிலை வந்துச்சு.. காட்சி நல்லா வந்ததால் படத்தின் மீது கை வைக்க வேண்டியதா போச்சு..  இந்த தலைநகரம் 2 படத்துல காமெடி இருந்துச்சுனா நல்லாருந்துருக்காது அதனால் வைக்கல..” என்றார் இயக்குனர் சுந்தர் சி.

மேலும் இயக்குனர் சுந்தர் சி  அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தன் திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ உள்ளே...

 

 

நீண்ட நாளுக்கு பின் தமிழில் ஹிட் கொடுத்த சித்தார்த்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – டக்கர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் உள்ளே..
சினிமா

நீண்ட நாளுக்கு பின் தமிழில் ஹிட் கொடுத்த சித்தார்த்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – டக்கர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் உள்ளே..

“கோவில் இடிச்சதும் படம் எடுக்கவே முடியல..” வீரன் உருவான விதம் குறித்து படக்குழு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

“கோவில் இடிச்சதும் படம் எடுக்கவே முடியல..” வீரன் உருவான விதம் குறித்து படக்குழு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – வைரல் வீடியோ உள்ளே..

சினிமா

"அட அறிவு கெட்ட முட்ட..!"- மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ஆயுத எழுத்து பட அனுபவத்தை பகிர்ந்த சித்தார்த்! கலகலப்பான வீடியோ இதோ